தோனி மனைவியுடன் செல்பி.. சிஎஸ்கே தான் என் லைஃப்.. விக்னேஷ் சிவனின் அசத்தல் பதிவு..!

தல தோனி மனைவி சாக்‌ஷி தோனியுடன் செல்பி எடுத்துக் கொண்ட இயக்குனர் விக்னேஷ் சிவன் ’சிஎஸ்கே தான் தனது லைஃப் என்றும், மறக்க முடியாத நிகழ்வு என்றும், எங்கு பார்த்தாலும் யெல்லோ தான் என்றும் பதிவு செய்துள்ளார்.

நேற்று நடைபெற்ற ஐபிஎல் தொடரின் இறுதி போட்டியில் சிஎஸ்கே அணி அபார வெற்றி பெற்றதை அடுத்து அந்த அணிக்கு நாடு முழுவதிலும் இருந்து வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

இந்த நிலையில் நேற்றைய போட்டியை தமிழ் திரை உலகை சேர்ந்த பலர் நேரில் பார்த்தார்கள் என்பதும் சிஎஸ்கே வெற்றியை நேரில் பார்த்து கொண்டாடினார்கள் என்பதையும் ஏற்கனவே பார்த்தோம்.

இந்த நிலையில் சமீபத்தில் கேன்ஸ் திரைப்பட விழாவுக்காக பிரான்ஸ் சென்றிருந்த இயக்குனர் விக்னேஷ் சிவன், அங்கிருந்து சிஎஸ்கே போட்டியை பார்ப்பதற்காக இந்தியா திரும்பினார். நேற்று அவர் அகமதாபாத் மைதானத்தில் இருந்து எடுத்த புகைப்படங்களை தனது சமூக வலைதளத்தில் பதிவு செய்த நிலையில் தோனி மனைவி சாக்சி தோனியுடன் இணைந்து எடுத்த செல்பி புகைப்படத்தையும் பதிவு செய்துள்ளார்.

தனது வாழ்க்கையில் மறக்க முடியாத நிமிடங்கள், சிஎஸ்கே தான் தனது லைஃப், எங்கு பார்த்தாலும் யெல்லா தான் தெரிகிறது என்றும் அவர் இந்த பதிவில் கேப்ஷன் ஆக பதிவு செய்துள்ளார். இந்த பதிவுக்கு ரசிகர்கள் தங்கள் பாணியில் கமெண்ட் செய்துள்ளனர், குறிப்பாக எங்கள் தலைவி நயன் எங்கே? என்ற கேள்வியை பலர் எழுப்பி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Trending Articles