மணிலாவில் பிடிபட்ட சீன உளவாளிகள்..
--------------------------------------------------------------------------
தென் கிழக்கு ஆசியவில் முக்கியமான நாடாக விளங்கும் பிலிப்பைன்ஸ் கலாச்சார ரீதியாகவும் சமுக அரசியல் ரீதியாகவும் அமெரிக்காவை பின்பற்றும் ஒரு அமெரிக்க காலனி நாடாகும்.
இங்குள்ள சுபிக் வளைகுடாவில் உளவுப் பணிகளை மேற்கொண்ட ஆறு சீனர்களையும் அவர்களுக்கு உதவிய பிலிப்பைன்ஸ் நாட்டவர் ஒருவரையும் மணிலா தேசிய பாதுகாப்பு முகமை கைது செய்துள்ளது.
சுபிக்வளைகுடாவில் சில ஆண்டுகளுக்கு முன்னர்வரை அமெரிக்க ராணுவத்தின் பிரம்மாண்டமான கற்படைத் தளம் செயல்பட்டு வந்தது. அமெரிக்காவிற்கு வெளியே செயல்பட்ட அமெரிக்காவின் முக்கியமான கடற்படைத்தளம் என்ற பெருமையை பெற்ற இந்த சுபிக் கடற்படித்தளம் தற்போது செயல்படவில்லை என்றாலும் அமெரிக்க கடற்படைக் கப்பல்கள் இந்த பகுதியில் பிலிப்பைன்ஸ் கடற்படையுடன் இணைந்து கூட்டுப் பயிற்சிகளில் ஈடு பட்டு வருவது வழக்கமான விஷயமாகும்.
தற்போது கைது செய்யப்பட்ட உளவாளிகள் மீனவர்கள் என்ற போர்வையில் ட்ரோன்கள் மூலம் தூண்டில்களை வீசுவதுபோல அமெரிக்க பிலிப்பைன்ஸ் கடற்படைக் கப்பல்களை உளவு பார்த்தாக கைது செய்யப்பட்டதாக பிலிப்பைன்சின் ஆர் எப் எ வானொலி தெரிவித்துள்ளது.
இன்று கைது செய்யப்பட்ட ஆறு பேரைத் தொடர்ந்து பிலிப்பைன்சில் இந்த ஆண்டு இதுவரை பன்னிரெண்டு சீன நாட்டவர்கள் உளவு பார்த்தமைக்காக கைது செய்யப்பட்டுள்ளனர்.