எனக்கும் அரசியலுக்கு வர ஆசை இருக்கு.. விஜய்க்கு ஒரு சான்ஸ் கொடுக்கலாம்: பிரபல நடிகை..!

தமிழ் சீரியல் மற்றும் திரைப்பட நடிகை எனக்கும் அரசியலுக்கு வர ஆசை இருக்கிறது என்றும் அரசியலுக்கு வந்துள்ள விஜய்க்கு ஒரு வாய்ப்பு கொடுக்கலாம் என்றும் பேட்டி அளித்துள்ளார்.

சன் டிவியில் ஒளிபரப்பான ’தெய்வமகள்’ ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பான ’லட்சுமி வந்தாச்சு’ உள்பட ஒரு சில சீரியல் மூலம் பிரபலமானவர் நடிகை வாணி போஜன். இவர் ’செங்களம்’ உள்பட ஒரு சில வெப் தொடர்களில் நடித்துள்ளார். மேலும் ‘ஓ மை கடவுளே’ ’பாயும் ஒளி நீ எனக்கு’ உட்பட சில தமிழ் படங்களில் நடித்துள்ளார் என்பதும் இவரது நடிப்பில் தற்போது மூன்று படங்கள் உருவாகி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்த வாணி போஜன் ’விஜய் சார் அரசியலுக்கு வரட்டும், அவருக்கும் ஒரு வாய்ப்பு கொடுக்கலாம், வாய்ப்பு கொடுத்தால் தான் அவர் என்ன செய்கிறார், அவருடைய நோக்கம் என்ன என்பதை தெரிந்து கொள்ளலாம் என்று கூறினார்.

மேலும் ’செங்களம்’ என்ற வெப் தொடரில் நடிக்கும் போது எனக்கும் அரசியல் ஆசை இருந்தது, நானும் அரசியலுக்கு வரலாம் என்றும் அவர் கூறினார். விஜய் அரசியலை அவர் ஆதரிப்பதை பார்க்கும்போது அவர் விஜய் கட்சியில் இணைவாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Trending Articles