ஜோடியாக சிஎஸ்கே மேட்ச் பார்க்க சென்ற லோகேஷ் - ஸ்ருதிஹாசன் .. வைரல் புகைப்படம்..!

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று சிஎஸ்கே மற்றும் பெங்களூர் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் போட்டி நடைபெற்ற நிலையில் இந்த போட்டியை பார்க்க பல திரையுலக நட்சத்திரங்கள் வந்திருந்தார்கள் என்பது குறித்த புகைப்படங்களை சமூக வலைதளத்தில் பார்த்திருப்போம்.

இந்த நிலையில் லோகேஷ் கனகராஜ் மற்றும் ஸ்ருதிஹாசன் ஆகிய இருவரும் ஜோடியாக இந்த போட்டியை பார்க்க வந்திருந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

கமல்ஹாசன் தயாரிப்பில் ஸ்ருதிஹாசன் பாடிய ஆல்பம் பாடலான ‘இனிமேல்’ டீசர் சமீபத்தில் வெளியானது என்பதும் இதில் லோகேஷ் கனகராஜ் மற்றும் ஸ்ருதிஹாசன் நடித்திருக்க, இருவருக்கும் கெமிஸ்ட்ரி சூப்பராக இருந்தது என்று ரசிகர்கள் பாராட்டு தெரிவித்தனர் என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்த ஆல்பம் பாடல் நாளை மறுநாள் அதாவது மார்ச் 25ஆம் தேதி ரிலீசாக இருக்கும் நிலையில் இந்த பாடலுக்கு நல்ல வரவேற்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் இந்த பாடலின் டீசர் இணையத்தில் வைரலாகி வரும் நிலையில் லோகேஷ் கனகராஜ் மற்றும் ஸ்ருதிஹாசன் ஆகிய இருவரும் நேற்று சிஎஸ்கே மற்றும் ஆர்சிபி போட்டியை பார்க்க வந்திருந்த புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. இந்த புகைப்படத்திற்கு ஏராளமான ரசிகர்கள் கமெண்ட்களை பதிவு செய்து வரும் நிலையில், இந்த புகைப்படத்தை பார்த்ததும் உங்களுக்கு என்ன தோன்றுகிறது என்பதை கமெண்ட் செய்யுங்கள்.

Trending Articles