நேற்று அதிகாலை நடந்த ஐபிஎல் இறுதிப் போட்டியில் சென்னை மற்றும் குஜராத் அணிகள் மோதிய போது ஜியோ சினிமா தளத்தில் பார்வையாளர்களின் எண்ணிக்கை சாதனை படைத்துள்ளது.
2023 ஐபிஎல் போட்டிகளை ஜியோ சினிமா இலவசமாக ஒளிபரப்பி வந்த நிலையில் மில்லியன் கணக்கான மக்கள் அதை பார்த்து வருகின்றனர் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் சிஎஸ்கே மற்றும் குஜராத் இடையிலான இறுதிப் போட்டியில் ஜியோ சினிமா பார்வையாளர்களில் எண்ணிக்கையில் சாதனை செய்துள்ளது
நேற்றைய இறுதிப் போட்டியின் கடைசி ஓவரை மட்டும் 3.2 கோடி பார்வையாளர்கள் ஜியோ சினிமாவில் ஐபிஎல் போட்டியை கண்டு ரசித்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்பு இந்த சாதனையை ஹாட்ஸ்டார் வைத்திருந்தது. கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் போட்டியை 2.53 கோடி பேர் பார்த்த நிலையில் அந்த சாதனையை ஜியோ சினிமா முறியடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த ஆண்டுகளில் ஹாட்ஸ்டார் கட்டணம் வாங்கி ஐபிஎல் போட்டிகளை ஒளிபரப்பி வந்த நிலையில் ஜியோ சினிமா இந்த ஆண்டு கட்டணம் இன்றி இலவசமாக ஐபிஎல் போட்டியை ஒளிபரப்யதால், ஜியோ சினிமாவிற்கு சுமார் பத்து மில்லியன் புதிய சந்தாதாரர்கள் கிடைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஐபிஎல் போட்டி முடிவடைந்தாலும் ஜியோ சினிமாவில் மேலும் சில கூடுதல் ஒப்பந்தங்கள் செய்யப்பட்டிருப்பதால் 10 மில்லியன் புதிய சந்தாதாரர்களில் பலர் நிரந்தர சந்தாதாரர்களாக மாற வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
ஐபிஎல் ஃபைனல் பார்வையாளர்கள்: ஜியோ சினிமா சாதனை..!
schedulePublished May 31st 23