2025 தமிழ் புத்தாண்டு பலன்கள் - பிரபல ஜோதிடர் ஷெல்வி ஜோதிட விளக்கம் !

2025 ஏப்ரல் 14ஆம் தேதி தொடங்கும் 'விஸ்வாவசு' தமிழ் புத்தாண்டு ஒவ்வொரு ராசிக்கும் எவ்வாறு பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை ஆன்மீககிளிட்ஸ் யூடியூப் சேனல் வாயிலாக, பிரபல ஜோதிட நிபுணர் செல்வி அவர்கள் அலசியுள்ளார்.

வாக்கியம் vs திருக்கணிதம்:
செல்வி அவர்கள் முதலில் வாக்கிய மற்றும் திருக்கணித பஞ்சாங்கங்களுக்கிடையேயான வித்தியாசங்களை தெளிவாக விளக்குகின்றார். கோயில் அனுஷ்டானங்களில் வாக்கியம் பின்பற்றப்பட்டாலும், கணித ரீதியாக திருக்கணிதமே அதிகக் கொள்கைப் பின்பற்றும் ஜோதிடர்களால் ஏற்றுக் கொள்ளப்படுகிறது. இது பலரிடையே ஏற்பட்ட குழப்பங்களுக்கு தீர்வாக அமைகிறது என்றும் அவர் சுட்டிக்காட்டுகின்றார்.

ஜாதக பலன்கள் & கோச்சார பலன்கள்:
செல்வி அவர்கள் கூறுவதாவது, “பொதுவான கோச்சார பலன்கள் வெறும் 30% - 40% வரை மட்டுமே பாதிப்பை அளிக்கும். உண்மையான பலன்கள் ஜாதகத்தின் தசாபுத்திகள், லக்னம், நட்சத்திர பாதம் போன்ற ஆழமான அம்சங்களைப் பொருத்தே தீர்மானிக்கப்படும்.”

மூன்றாம் பரிமாண ஜோதிடம் எனும் கோணத்தில், செல்வி அவர்கள் ஜாதகத்தில் தசாப்புத்திகளின் தாக்கம், சனி – குரு – ராகு – கேது பெயர்ச்சிகளின் நேரடி விளைவுகள், மனிதர்களின் மனநிலை, நம்பிக்கை, வாழ்வியலில் ஏற்படும் ஏற்ற இறக்கங்களை நுணுக்கமாக விவரிக்கிறார்.

ஜாதகர் மட்டும் அல்ல, ஜோதிடரும் மனிதர் என்ற உண்மையை தெளிவுபடுத்தும் வகையில், “எல்லா பெரிய ஜோதிடர்களுக்குமே சில நாட்களில் தங்கள் தசாபுத்திகள் சரியில்லாத காரணத்தால் பலன்கள் புரியாமல் போகக்கூடும்” என்கிறார்.

மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கும் 2025 விசுவாசு வருட பலன்கள், முக்கிய மாற்றங்கள், ஜாதக ரீதியான பரிகாரங்கள், மற்றும் எச்சரிக்கைகள் ஆகியவற்றை விரிவாக எடுத்துரைத்தார்.Aanmeegaglitz Whatsapp Channel

Trending Articles