கன்னி ராசி பலன்கள் 2024 ஜூலை முதல் செப்டம்பர் வரை ஆதித்ய குருஜி கணிப்பு !

ஆன்மீககிளிட்ஸ் யூடியூப் சேனலில், பிரபல ஜோதிடர் ஆதித்ய குருஜி அவர்கள் 2024ம் ஆண்டு ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களுக்கான கன்னிராசி பலனை கணித்துள்ளார். பொதுவாக இந்த மூன்று மாதங்களில் எந்த ராசிக்கும் பெரிய பாதிப்புகள் இல்லை என்றும், அனைத்து கிரகங்களும் நல்ல நிலையில் இருப்பதால் நல்ல பலன்களே கிடைக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கன்னி ராசி அன்பர்களுக்கு இந்த மூன்று மாதங்கள் மிகவும் சிறப்பானவை என்று ஆதித்ய குருஜி கணித்துள்ளார். கன்னி ராசிக்காரர்கள் நீண்ட காலமாக அனுபவித்து வந்த சோதனைகள் அனைத்தும் முடிவுக்கு வந்து, மகிழ்ச்சியான காலம் பிறக்கும் என்ற சுபச் செய்தியை அவர் தெரிவித்துள்ளார். மிகப்பெரிய யோக அமைப்புகள் உருவாகும் என்றும், ராசி அதிபதி பலமாக இருப்பதால் அதிர்ஷ்டம் திசை வரும் என்றும் கூறியுள்ளார். ஜாதக அமைப்பில் கோச்சார பலன்கள் சிலருக்கு சாதகமாக இல்லாவிட்டாலும், கடுமையான பாதிப்புகள் தணிந்து, சிறிய அளவிலான தடைதடங்களைத் தவிர பெரிய பிரச்சனைகள் ஏற்படாது என்றும் அவர் கூறுகிறார்.

ஆகஸ்ட் மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை ஆன்மீக பயணம் மேற்கொள்ளும் யோகம் இருப்பதாகவும், கடன் தொல்லைகள் தீரும் என்றும் ஆதித்ய குருஜி கணித்துள்ளார். சுருக்கமாகச் சொல்ல வேண்டுமானால், இந்த மூன்று மாதங்களும் கன்னி ராசி அன்பர்களுக்கு மிகவும் நல்லதாக இருக்கும். குறிப்பாக செப்டம்பர் மாதம் மாதம் மிகவும் சிறப்பான பலன்களைத் தரும்.

Aanmeegaglitz Whatsapp Channel

Trending Articles