மிதுன ராசி பலன்கள் 2024 ஜூலை முதல் செப்டம்பர் வரை ஆதித்ய குருஜி கணிப்பு !

thumb_upLike
commentComments
shareShare

ஆன்மீககிளிட்ஸ் யூடியூப் சேனலில், பிரபல ஜோதிடர் ஆதித்ய குருஜி அவர்கள் 2024ம் ஆண்டு ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களுக்கான மிதுன ராசி பலனை கணித்துள்ளார். இந்த மூன்று மாதங்களில் எந்த ராசிக்கும் பெரிய பாதிப்புகள் இல்லை என்றும், அனைத்து கிரகங்களும் நல்ல நிலையில் இருப்பதால் பொதுவாக நல்ல பலன்களே கிடைக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த மூன்று மாதங்கள் மிகவும் சிறப்பானவை என்று ஆதித்ய குருஜி கணித்துள்ளார். 2024ம் ஆண்டின் மத்திய காலம் மிதுன ராசி அன்பர்களுக்கு அபார யோகத்தை தரும். கடந்த காலத்தில் கஷ்டங்களை அனுபவித்து வந்தவர்களுக்கு இனி நல்ல பலன்கள் கிடைக்கத் தொடங்கும். எல்லா நல்ல விஷயங்களும் உங்கள் கைகளுக்கு எளிதாகக் கிடைக்கும். வாழ்க்கையில் முன்னேற்றம் காண உங்களுக்கு ஒரு பெரியவர் வழிகாட்டி உதவி செய்வார். மேற்படிப்பு படிக்க விரும்பியவர்களுக்கு இந்த மூன்று மாதங்களில் அந்த வாய்ப்பு கிடைக்கும். அரசு வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கும் நல்ல பலன்கள் கிடைக்கும். செப்டம்பர் மாதம் மிகப்பெரிய யோகம் வரும். கேட்டதெல்லாம் கிடைக்கும். வெளிநாடு செல்ல வாய்ப்பு இருப்பதோடு, எல்லா வகையிலும் நல்ல யோக காலம் இது. சுப காரியங்கள் நடைபெறும் மங்களகரமான காலம் இது என்பதையும் ஆதித்ய குருஜி தெரிவித்துள்ளார்.

முழுமையான மிதுன ராசி பலனை அறிய ஆன்மீககிளிட்ஸ் யூடியூப் சேனலில் உள்ள வீடியோவைப் பாருங்கள்!

Aanmeegaglitz Whatsapp Channel

Trending Articles
NewsGlitz in Social Media
Share to your pages!
Close