பிரபல ஆன்மீக யூடியூப் சேனல் ஆன்மீககிளிட்ஸில் (AANMEGAGLITZ) ALP ஜோதிடர் பாலாறு சுவாமிகள் அவர்கள் அளித்த பேட்டியில், சித்தர்கள் பற்றி பின்வருவன பேசி இருக்கிறார் !
சித்தர்கள் யார்?
சித்தர்கள் என்பவர் இறைவனுக்கு நிகரானவர்கள். இறைவனை உணர்ந்தவர்கள், இறைவனை நேரில் சந்தித்தவர்கள். அவர்கள் நமக்காகவும், மக்களுக்காகவும் வாழ்ந்து, இன்றளவும் அருவமாக நம்முடன் இருக்கக்கூடியவர்கள். மகான்கள், யோகிகள் இவர்களெல்லாம் சித்தர்களின் வரிசையில் அடங்குவர். இவர்கள் மக்களுடைய வாழ்வியலில் ஏற்படும் பிரச்சனைகள், நடக்கவிருப்பவை ஆகியவற்றை அறிந்து, அவற்றை எப்படி சரி செய்ய வேண்டும் என்று பாரம்பரியமாக வழிகாட்டியுள்ளனர்.
சித்தர் வழிபாடு - ஒரு முக்கியத்துவம் வாய்ந்த முறை
பொதுவாகவே நாம் குலதெய்வ வழிபாட்டிற்கு அதிக முக்கியத்துவம் கொடுப்போம். பல பதிவுகளில் குலதெய்வம் சம்பந்தமான விஷயங்களை நாம் தொடர்ந்து பேசி வருகிறோம். நமக்கு முக்கியமான வழிபாட்டு முறைகளில் முதன்மையானது குலதெய்வ வழிபாடு. அதற்கு அடுத்தபடியாக முன்னோர்கள், அவர்களே சித்தர்கள், மகான்கள். இவர்கள் இன்றளவும் அருவமாக வாழ்ந்து நம்முடன் கலந்து இருக்கிறார்கள்.
சித்தர்களை யார் வேண்டுமானாலும் வழிபடலாம். இதில் எந்த மாறுபட்ட கருத்தும் கிடையாது. குறிப்பாக பௌர்ணமி நாட்களில் அவர்களை வழிபடுவது சிறப்பான விஷயம். ஜீவ சமாதி அடைந்த சித்தர்கள், வாழ்ந்து மறைந்த முன்னோர்கள் இவர்களையெல்லாம் பௌர்ணமி நாளில் வழிபடுவது எப்பொழுதும் நமக்கு நன்மையை தரும்.
உங்கள் ஜாதகமும், உங்களுக்கான சித்தரும்
ஜாதக ரீதியாக பார்க்கும்போது, எண்ணற்ற சித்தர்கள் இருக்கிறார்கள். நமக்கு தெரிந்தவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள், தெரியாதவர்கள் இருக்கிறார்கள். அருவமாக இருப்பவர்கள், பல பெயர்களில் இருப்பவர்கள் என எல்லாவற்றையும் தாண்டி இறைவனோடு கலந்த ஒரு விஷயம் தான் சித்தர்கள், மகான்கள்.
உங்கள் ஜாதகத்தை வைத்து உங்களுக்கான சித்தர் யார் என்று கண்டுபிடிக்க முடியும். பொதுவாக, இன்றைய நட்சத்திரம் எதுவோ அந்த நட்சத்திரத்தில் பிறந்த சித்தரை வணங்குவது ஒரு முறை. அதைத் தாண்டி, உங்கள் பிறப்பு ஜாதகத்தில் வரக்கூடிய 13வது நட்சத்திரத்திற்கான சித்தரை வணங்குவது ஒரு கணக்கீட்டு முறை இருக்கிறது. உங்கள் பிறந்த நட்சத்திரத்திலிருந்து 13வது நட்சத்திரம் எதுவோ, அந்த நட்சத்திரத்திற்குரிய சித்தரை வழிபடுவது மிகவும் நன்மை பயக்கும். இந்தத் தகவலை வீடியோவின் டிஸ்கிரிப்ஷனில் கொடுக்கிறோம். மக்கள் சுயமாக பார்த்து தெரிந்து கொள்ளட்டும்.
13வது நட்சத்திரம் - ஒரு மேம்பட்டத்திற்கான வழி
நம்முடைய 27 நட்சத்திரங்களில் ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் கல்வி, பொருளாதாரம், திருமணம் போன்ற குறிப்பிட்ட அமைப்புகள் உண்டு. இந்த 13வது நட்சத்திரம் என்பது உங்களை அடுத்த கட்டத்திற்கு கொண்டு போவதற்கான முயற்சியின் நட்சத்திரம். பத்தாவது நட்சத்திரத்தை கர்ம நட்சத்திரம் என்று சொல்வோம். அப்படி ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் ஒரு குணாதிசயம் உண்டு.
உங்கள் ஜாதகத்தில் 13வது நட்சத்திரப் புள்ளியை ஆக்டிவேஷன் செய்யும்போது, அதற்கான சித்தர்கள் மற்றும் மகான்களை வழிபடும்போது நீங்கள் மேம்பட்ட நிலையை அடைவீர்கள். பதவி உயர்வு வேண்டுபவர்கள் அல்லது வாழ்க்கையில் அடுத்த கட்டத்திற்கு செல்ல விரும்புபவர்களுக்கு இந்த வழிபாடு மிகவும் உதவும். வேலை தேடுபவர்கள், திருமணம் போன்ற எந்த விஷயமானாலும், ஒரு மனிதன் அடுத்த கட்டத்திற்கு போவதற்கு இந்த சித்தர் மகானை வழிபடும்போது, அவர்கள் அந்த இலக்கை அடைவதற்கான எல்லா வழிகாட்டுதலையும் அந்த மகான்கள் தருவார்கள். இது ஒரு நியதி.
ஜீவ சமாதியின் முக்கியத்துவம்
சில சித்தர்கள் ஜீவ சமாதி அடைந்திருப்பார்கள், சில பேர் உருவமாக வெளிப்படுவார்கள். நாம் வெளிப்படையாகவே ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் உரிய சித்தர்களின் பெயர்களை டிஸ்கிரிப்ஷனில் கொடுக்க இருக்கிறோம். மக்கள் பயனடையட்டும்.
ஆயிரம் இருந்தாலும், நீங்கள் அந்த ஜீவ சமாதிக்கு கண்டிப்பாக நேரில் செல்ல வேண்டும். வெளிநாட்டில் இருப்பவர்கள் புகைப்படத்தை வைத்து வணங்கலாம். ஆனால் தமிழ்நாட்டில் இருப்பவர்கள் அவசியம் ஜீவ சமாதிக்கு சென்று வழிபடும்போது, உங்களை அடுத்த கட்டத்திற்கு கொண்டு போவதற்கான விஷயத்தை அவர்கள் செய்வார்கள்.
சித்தர்களின் அருள் பார்வை
ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் ஒரு விஷயம் உண்டு. ஜென்ம நட்சத்திரம் நல்லது கெட்டது இரண்டும் செய்யும். இரண்டாவது நட்சத்திரம் தனம், குடும்பம், வாக்குஸ்தானத்தை இயக்கும். இப்படி ஒவ்வொரு நட்சத்திரமும் ஒவ்வொரு விஷயத்தை இயக்கும். இந்த 13வது நட்சத்திரம் இயக்கும்போது உங்களுடைய சித்தருடைய அருட்பார்வை உங்களுக்கு நிச்சயமாக கிடைக்கும். இதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை.
மந்திரங்கள் அவசியமா?
பொதுவாக சமஸ்கிருதத்தில் சில மந்திரங்கள் உண்டு. ஆனால் நம்மில் பலருக்கு அது சற்று தூரமாக இருக்கும். அதனால் பெரும்பாலும் மக்களுக்கு சொல்லக்கூடிய விஷயம் அந்த சித்தருடைய அல்லது மகானுடைய பெயரைச் சொல்லுங்கள் போதும். பெயர் ஒன்றை மட்டும் சொன்னாலே போதும். எப்படி இருந்தாலும் உங்களுக்கு கனெக்ட் ஆகப் போகிறார்கள். மந்திரம் என்பது உங்களை கம்யூனிகேட் பண்ணும் ஒரு விஷயம். ஒரு கட்டத்தில் மந்திர உச்சாடனம் நின்று அமைதியான நிலை ஏற்படும். அதுதான் தியான நிலை.
கோவில்களின் மகத்துவம்
சித்தர்களும் மகான்களும் உங்களுக்கான வைப்ரேஷனை அவர்கள் பல ஆண்டு கால தவம் புரிந்து அந்த வரத்தை வாங்கி கோவில்களில் வைத்து இருக்கிறார்கள். அந்த கோவிலுக்குள் நீங்கள் நுழையும்போது அந்த பிரபஞ்ச சக்தி இயங்கி உங்களுடைய கெட்ட கர்மாவை வெளியேற்றி நல்ல விஷயங்களை உங்களுக்குள் புகுத்தும். உங்களுடைய ஆரா தூய்மை அடையும்.
உங்களுக்கான சித்தர் யார்?
நீங்கள் எந்த மதத்தை சார்ந்தவராக இருந்தாலும், உங்களுடைய தெய்வ வழிபாட்டு முறையில் உறுதியாக இருங்கள். எந்த தெய்வமாக இருந்தாலும் உறுதியாக ஒரே மனநிலையில் தொடர்ந்து பயணிக்கும்போது உங்களுடைய கர்ம வினைகள் குறையும்.
ஒரு குருவை தேடிப் போங்கள். அவருடைய உபதேசத்தை கேளுங்கள். குருமார்கள் உங்களுடைய ஆன்மாவை சுத்தப்படுத்தக்கூடிய செயலைத்தான் செய்வார்கள். நல்ல குரு அமைந்தால் வாழ்க்கையில் எல்லா விஷயத்தையும் கடந்து வந்து விடலாம்.
ஆகவே, உங்களுக்கு என்று ஒரு சித்தர் இருக்கிறார். அந்த சித்தரை பிடித்துக் கொள்ளுங்கள். மற்ற சித்தர்களையும் வணங்குங்கள். ஆனால் இவரை கொஞ்சம் இருகப் பிடித்துக் கொள்ளுங்கள். அவர் நிச்சயமாக உங்களை தூக்கி விடுவார்.