கணவருக்காக போலீசாரிடம் மல்லுக்கட்டிய பெண்.. தொப்பியை வீசி தாக்குதல் நடத்தியதால் பரபரப்பு..!

thumb_upLike
commentComments
shareShare

மது அருந்தி வாகனம் ஓட்டியதாக கணவரிடம் போலீசார் செய்து கொண்டிருந்த நிலையில் அவருடைய மனைவி போலீசாருடன் வாக்குவாதம் செய்ததோடு போலீஸ் தொப்பியை வீசியது பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

சென்னை நெல்சன் மாணிக்கம் சாலையில் இரண்டு வாலிபர்கள் இருசக்கர வாகனத்தில் பயணம் செய்து கொண்டிருந்த நிலையில் அவர்கள் மது போதையில் இருந்தது தெரியவந்தது. உடனடியாக போலீசார் அவர்களை நிறுத்தி சோதனை செய்ய முற்பட்ட போது அவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதனை அடுத்து அவர்களில் ஒருவர் தனது மனைவிக்கு போன் செய்ததை அடுத்து அவருடைய மனைவி சில நிமிடங்களில் சம்பவ இடத்திற்கு வந்தார். அந்த பெண் காவல் உதவி ஆய்வாளருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு ஒரு கட்டத்தில் திடீரென நாற்காலி மீது இருந்த போலீஸ்காரர்களின் தொப்பியை தூக்கி எறிந்தார்.

இந்த நிலையில் அதை வீடியோவாக எடுத்த காவலர் வெள்ளத்துரை என்பவர் அளித்த புகாரின் பேரில் வாக்குவாதம் செய்த பெண் அக்ஷயா, அவரது கணவர் சத்யராஜ் மற்றும் அவருடைய நண்பர் வினோத் குமார் ஆகிய மூன்று பேர்கள் மீது வழக்கு பதிவு செய்து மூவரையும் சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

NewsGlitz in Social Media
Share to your pages!
Close