'விசில் போடு' பாடல் 'கோட்' படத்தில் இல்லையா? வெங்கட் பிரபு கூறிய ஆச்சரிய தகவல்..!

thumb_upLike
commentComments
shareShare

தளபதி விஜய் நடித்த ‘கோட்’ திரைப்படத்தில் ’விசில் போடு’ என்ற பாடல் இடம் பெற்றுள்ளது என்பதும் இந்த பாடல் சிங்கிள் பாடலாக வெளியான போது பல்வேறு விமர்சனங்கள் எழுந்தது என்பதையும் பார்த்தோம். இந்த நிலையில் இந்த பாடலின் வேறொரு வெர்ஷன் தான் திரைப்படத்தில் உள்ளது என்றும் நீங்கள் கேட்ட ’விசில் போடு’ வெர்ஷன் திரைப்படத்தில் இல்லை என்றும் இயக்குனர் வெங்கட் பிரபு கூ கூறி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

விஜய் நடிப்பில், வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவான ‘கோட்’ திரைப்படத்தில் ’விசில் போடு’ என்ற பாடலை யுவன் சங்கர் ராஜா கம்போஸ் செய்த நிலையில் இந்த பாடல் வெளியாகி ரசிகர்களை திருப்தி செய்யவில்லை. இதனால் இந்த படத்திற்கு நெகட்டிவ் விமர்சனம் கிடைத்த நிலையில் உடனடியாக வெங்கட் பிரபு தனது ஐடியாவை மாற்றி உள்ளார்.

’விசில் போடு’ பாடலின் வேறொரு வெர்ஷனை உருவாக்கி அதைத்தான் அவர் படத்தில் சேர்த்துள்ளதாகவும் ஏற்கனவே வெளியான முந்தைய வெர்ஷன் படத்தில் இல்லை என்றும் சமீபத்தில் அளித்த நேர்காணல் ஒன்றில் கூறியுள்ளார். விசில் போடு பாடலுக்கு நெகட்டிவ் விமர்சனம் கிடைத்தவுடன் உடனடியாக வெங்கட் பிரபு மாற்று ஏற்பாடு செய்துள்ளதை அடுத்த விஜய் ரசிகர்கள் அவரது புத்திசாலித்தனத்தை பாராட்டி வருகின்றனர். யுவன் சங்கர் ராஜா கம்போஸ் புதிய வெர்ஷன் விசில் போடு பாடல் நிச்சயம் ரசிகர்களை கவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விஜய், மீனாட்சி சவுத்ரி, பிரசாந்த், பிரபுதேவா, அஜ்மல், மோகன், ஜெயராம், சினேகா, லைலா, வைபவ், பிரேம்ஜி, யுகேந்திரன், பார்வதி நாயர், விடிவி கணேஷ், யோகி பாபு உட்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் பிரமாண்டமாக தயாரித்துள்ளது. யுவன் ஷங்கர் ராஜா இசையில் சித்தார்த் நுனி ஒளிப்பதிவில் வெங்கட்ராஜன் படத்தொகுப்பில் இந்த படம் உருவாகியுள்ளது.

NewsGlitz in Social Media
Share to your pages!
Close