2025 சனிப்பெயர்ச்சி பரிகாரம் என்ன ? 12 ராசிகளுக்கும் சனிப்பெயர்ச்சி பரிகாரமும் தீர்வுகளும்!

சனி பகவான் மார்ச் 29 அன்று மீன ராசிக்கு பெயர்ச்சி அடைந்துள்ளார். இதனால் 12 ராசிகளுக்கும் சில நன்மைகள், தீமைகள் ஏற்படும். பரிகாரம் செய்வதன் மூலம் கெடுதலில் இருந்து தப்பிக்கலாம்.

சனி பகவான் உண்மை, நேர்மை, நியாயம், ஒழுக்கம் ஆகியவற்றை எதிர்பார்க்கிறார்.

யாதொரு தவறும் செய்யாமல், இறைவன் போட்ட சட்ட திட்டங்களின்படி வாழ்ந்தால் எந்த பரிகாரமும் தேவையில்லை.

கால புருஷனுக்கு 12ம் இடத்தில் சனி பகவான் வந்திருக்கிறார். இது விரைய ஸ்தானம், தண்டனை ஸ்தானம். நாம் செய்த தவறுகளுக்கு தண்டனை கிடைக்கும். எனவே கவனமாக இருக்க வேண்டும்.

பரிகாரங்கள்:

மேஷம்: சனிக்கிழமைகளில் எள் தீபம் அல்லது கடுகு எண்ணெயில் தீபம் ஏற்றி வழிபாடு செய்யவும்.

ரிஷபம்: சனிக்கிழமைகளில் எண்ணெய் குளியல் எடுக்கவும். கோவிலுக்கு எண்ணெய் வாங்கி கொடுக்கவும்.

மிதுனம்: வெண்கல கிண்ணத்தில் நல்லெண்ணெய் ஊற்றி முகம் பார்த்து, பின் அதனை தீபத்திற்கு பயன்படுத்தவும்.

கடகம்: வலது மோதிர விரலில் இரும்பு மோதிரம் அணியவும். தாதுரா வேரை தாயத்தில் அடைத்து கட்டிக்கொள்ளவும்.

சிம்மம்: உடல் ஊனமுற்றோர், பொருளாதார ரீதியில் நலிந்தோர், மாற்று திறனாளிகளுக்கு உதவி செய்யுங்கள்.

கன்னி: விநாயகர் அகவல், ஹனுமான் சாலிசா பாடலாம். சிவதாண்டவ ஸ்தோத்திரம் பாடலாம். ஆண்கள் காதில் கடுக்கண் அணியலாம்.

துலாம்: விநாயகருக்கு சதுர்த்தி அன்று எட்டு சிதறு தேங்காய் உடைக்கவும்.

விருச்சிகம்: சனிக்கிழமைகளில் அரச மரத்திற்கு தண்ணீர் ஊற்றி வழிபாடு செய்யவும்.

தனுசு: ஆஞ்சநேயருக்கு வடமாலை மற்றும் வெற்றிலை மாலை சனிக்கிழமை சாத்தி வழிபாடு செய்யவும்.

மகரம்: கருப்பு கயிறில் ஒன்பது முடிச்சு போட்டு வலது கணுக்காலில் ஆண்கள் கட்டவும், பெண்கள் இடது கணுக்காலில் கட்டவும்.

கும்பம்: பசுமாட்டுக்கு அகத்தி கீரை கொடுக்கவும். நாய்களுக்கு பிஸ்கட், ரொட்டி துண்டு போடவும். காகத்துக்கு எள் கலந்த சாதம் வைக்கவும்.

மீனம்: எட்டு இரும்பு வளையத்தை சனிக்கிழமை சனி ஹோரையில் ஓடும் நீரில் விடவும்.

இந்த பரிகாரங்களை தொடர்ந்து செய்து வாழ்க்கையில் முன்னேற்றம் அடையுங்கள்.Aanmeega glitz Whatsapp channel

Trending Articles