தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் மாநாடு.. விஜயகாந்த், கமல் பாணியில் விஜய்?

thumb_upLike
commentComments
shareShare

தளபதி விஜய் கடந்த சில நாட்களுக்கு முன்னர் தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கிய நிலையில் அவ்வப்போது இந்த கட்சியின் நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்று வருகிறது என்பதும் உறுப்பினர் சேர்க்கையும் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்த நிலையில் விஜய் தற்போது ’கோட்’ படத்தின் படப்பிடிப்பில் இருக்கும் நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டு முதல் மாநாட்டை பிரமாண்டமாக நடத்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு மதுரையில் நடைபெற திட்டமிட்டுள்ளதாகவும் அப்போது கட்சியின் கொடி, சின்னம் ஆகியவை முறைப்படி விஜய்யால் அறிவிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

அரசியல் கட்சி தொடங்கிய நடிகர்கள் விஜயகாந்த், கமல்ஹாசன் ஆகிய இருவரும் தங்கள் கட்சியின் முதல் மாநாட்டை மதுரையில் தான் நடத்திய நிலையில், அவர்களது பாணியில் விஜய்யும் தனது கட்சியின் முதல் மாநாட்டை மதுரையில் நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. மதுரையில் நடைபெற உள்ள முதல் மாநாட்டில் அவரது ரசிகர்கள் லட்சக்கணக்கானோர் குவிந்து மாநாட்டை வெற்றிகரமாக நடத்தி முடிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் 2026 ஆம் ஆண்டு நடைபெறும் சட்டப்பேரவை தேர்தலில் எந்த கட்சியுடன் கூட்டணி கிடையாது என்றும் விஜயகாந்த் பாணியில் விஜய் தனித்து தான் போட்டியிடுவார் என்றும் கூறப்படுகிறது.

Trending Articles
NewsGlitz in Social Media
Share to your pages!
Close