சிஎஸ்கேவுக்காக இதைகூட செய்ய மாட்டேனா..? இன்று முதல் பிரார்த்தனையை நிறைவேற்றும் வரலட்சுமி..!

thumb_upLike
commentComments
shareShare

சிஎஸ்கே வெற்றி பெற்றால் ஒரு மாதத்திற்கு அசைவ உணவு சாப்பிட மாட்டேன் சைவ உணவு மற்றும் சாப்பிடுவேன் என பிரார்த்தனை செய்து கொண்டதாகவும் அந்த பிரார்த்தனையை இன்று முதல் நிறைவேற்ற இருப்பதாகவும் நடிகை வரலட்சுமி தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் ஐபிஎல் இறுதிப் போட்டியில் சிஎஸ்கே மற்றும் குஜராத் அணிகள் மோதியது என்பதும் இந்த போட்டியின் கிளைமாக்ஸ்-இல் இரண்டு பந்துகளில் 10 ரன்கள் அடிக்க வேண்டும் என்ற நிலையில் சிஎஸ்கே மற்றும் குஜராத் ரசிகர்கள் த்ரில்லின் உச்சகட்டத்தில் இருந்தனர் என்பது தெரிந்ததே.

மேலும் இரு அணிகளின் ரசிகர்கள் தங்கள் அணி ஜெயிக்க வேண்டும் என பிரார்த்தனை செய்து கொண்ட நிலையில் சிஎஸ்கே ஆதரவு நிலையை கொண்ட வரலட்சுமி, சிஎஸ்கே ஜெயித்தால் ஒரு மாதம் சைவ உணவுகளை மட்டும் சாப்பிடுவேன் என பிரார்த்தனை செய்து கொண்டார். இதனை அடுத்து ஜடேஜா அந்த இரண்டு பந்துகளில் ஒரு சிக்ஸர் மற்றும் ஒரு பவுண்டரி அடுத்து சிஎஸ்கேவை வெற்றி பெறச் செய்த நிலையில் இன்று முதல் தனது பிரார்த்தனையையும் நிறைவேற்ற போவதாக நடிகை வரலட்சுமி தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்.

அவர் இது குறித்து தனது ட்விட்டரில், ‘இனி ஒரு மாதத்திற்கு நான் சைவ உணவு சாப்பிடுவேன், பரவாயில்லை சிஎஸ்கேவுக்காக இதைக் கூட செய்ய மாட்டேனா? என்று தெரிவித்துள்ளார். இதையடுத்து அவருக்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

NewsGlitz in Social Media
Share to your pages!
Close