பிரபல யூடியூபர் டிடிஎஃப் வாசன், சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் நேற்று மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது ஹீலிங் செய்ய முயன்றார். அப்போது அவர் எதிர்பாராத விதமாக விபத்துக்குள்ளாகி படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார்.
இந்த நிலையில் சாலையில் ஆபத்தை விளைவிக்கும் வகையில் வாகன ஓட்டுதல் என்ற பிரிவு உட்பட சில பிரிவுகளில் போலீசார் டிடிஎஃப் வாசன் மீது வழக்கு பதிவு செய்தனர். இந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற பின், அவர் வீட்டுக்கு செல்லாமல் எங்கிருக்கிறார் என்று தெரியாமல் இருந்த நிலையில் தற்போது காஞ்சிபுரம் போலீசார் அவரை கைது செய்துள்ளனர்
பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் வாகனம் ஓட்டியது உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் அவர் மீது வழக்கு பதிவு செய்துள்ள நிலையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் அவரது ஓட்டுநர் உரிமத்தையும் ரத்து செய்ய போக்குவரத்து ஆணையரகம் பரிந்துரை செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. ’
டிடிஎஃப் வாசன் மோட்டார் பைக் சாகசம் குறித்த ’மஞ்சள் வீரன்’ என்ற படத்தில் நடிக்க வரும் நிலையில் அவரது லைசென்ஸ் ரத்து செய்யப்பட்டால் இந்த படம் கேள்விக்குறியாகும் என்றும் கூறப்படுகிறது.