ஜப்பானின் நாகசாகி மாகாணத்தில் உள்ள ஒரு விமான நிலையத்தில் இருந்து ஃபுகுவோகாவில் உள்ள மருத்துவமனைக்கு ஒரு ஏர் ஆம்புலன்ஸ் ஹெலிகாப்டர் நோயாளி ஒருவரை அவசர சிகிர்ச்ர்சைக்காக கொண்டு சென்ற போது விபத்துக்குள்ளானதாக கடலோர காவல் படை தெரிவித்துள்ளது.
தென்மேற்கு ஜப்பானில், கடலில் விழுந்து விபத்துக்குள்ளான ஹெலிகாப்டரை மீட்க கடலோர காவல்படை கப்பல் மீட்பு நடவடிகையை மேற்கொள்ளும் படத்தை, 7ஆவது பிராந்திய ஜப்பான் கடலோர காவல்படை தலைமையகம் வெளியிட்டுள்ளது.
இந்த துரதிர்ஷ்டகரமான சம்பவத்தில் ஹெலிகாப்டர் கடலில் விழுந்த போது, அதிலிருந்த நோயாளியும் உடன் இருந்த இரு நபர்களும் இறந்து விட்டதாக ஜப்பான் கடலோர காவல்படை தெரிவித்தது. விமானி ஹிரோஷி ஹமடா (66) ஹெலிகாப்டர் தொழில்நுட்ப பணியாளர் காஸுட்டோயோஷிடேக் மற்றும் சகுரா குனிடேக் (28) என்ற செவிலியர் ஆகியோர் உயிர்காக்கும் கருவிகளைப் பிடித்து தொங்கிக் கொண்டிருப்பதைக் கண்ட அவசரக் கால மீட்புப் பணியாளர்கள் அவர்களை மீட்டனர்.
மீட்கப்பட்ட மூவரும், தாழ்வெப்பநிலையால்(ஹைப்போதெர்மியா) பாதிக்கப்பட்டிருந்தாலும், சுயநினைவுடன் இருந்ததாக கூறப்படுகிறது.
இறந்த மூன்று பேரின் உடல்களும் ஜப்பான் விமான தற்காப்புப் படை ஹெலிகாப்டர் மூலம் மீட்கப் பட்டன.