இளவரசி டயானா கைது செய்யப்பட்டாரா? வரலாற்றைக் கிளறும் ஆச்சர்ய தகவல்!

thumb_upLike
commentComments
shareShare

உலகம் மக்களால் விரும்பப்பட்ட இங்கிலாந்து இளவரசி டயானா ஒருமுறை போலீஸாரால் கைது செய்யப்பட்டார் எனும் தகவல் வெளியாகி இருக்கிறது. சமீபத்திய நேர்காணல் ஒன்றில் இளவரசர் ஆண்ட்ரூவின் மனைவி கூறிய இந்தத் தகவல் தற்போது பலருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

வேல்ஸ் இளவரசர் சார்லஸை திருமணம் செய்துகொண்ட இளவரசி டயானாவும் மற்றொரு இளவரசரான ஆண்ட்ரூவை திருமணம் செய்துகொண்ட ஆண்ட்ரூவின் மனைவி சாரா ஃபென்குசனும் நெருங்கிய தோழிகளாக இருந்துள்ளனர். டயானாவின் மறைவிற்கு முன்பே இவர்களைப் பற்றிய தகவல்கள் அவ்வபோது ஊடகங்களில் வெளியாகி இருந்தது. இந்நிலையில் தற்போது 63 வயதான ஃபென்குசன் “தி கெல்லி கிளார்க்சன்“ எனும் பிரபல தொலைக்காட்சி நேர்காணல் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு தனது திருமண நிகழ்வு குறித்த நினைவலைகளைப் பகிர்ந்து கொண்டுள்ளார்.

அப்போது பேசிய ஃபென்குசன் 1986 இல் எனது திருமணத்திற்கு முன்பே பேச்சுலர் பார்டிக்கு ஏற்பாடு செய்திருந்தோம். இதற்காக நானும் டயானாவும் காவலர்கள் போன்று உடையணிந்து கொண்டு கேளிக்கை விடுத்திக்குச் சென்றோம். அங்கிருந்த ஊழியர்கள் “மன்னிக்கவும் இது ஒரு கேளிக்கை விடுதி. இங்கு காவல் அதிகாரிகளுக்கு சேவை செய்வதில்லை” எனக் கூறினார்கள். ஆனால் கேளிக்கை விடுதியில் இருந்த உண்மையான காவல் அதிகாரிகள் எங்களது செயல்களைப் பார்த்துவிட்டு உண்மையிலேயே எங்கள் இருவரையும் கைது செய்து காவல் வேனில் ஏற்றிவிட்டனர். அப்போது வேனில் இருந்த ஸ்மோக்கி ஃபிளேவர் பேக்கனை எடுத்து டயானா சாப்பிட ஆரம்பித்துவிட்டார். இந்த நிகழ்வு நடந்த சிறிது நேரத்திலேயே காவலர்கள் எங்களை அடையாளம் கண்டுகொண்டு பின்னர் விடுவித்தனர் என்று கூறியுள்ளார்.

இளவரசி டயானா மற்றும் சாரா ஃபென்குசன் இருவரும் நெருங்கிய தோழிகளாக இருந்துள்ளனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இளவரசர்களை இருவரும் திருமணம் செய்துகொண்டுள்ளனர். ஆனால் 1996 ஆம் ஆண்டு இருவருமே தங்களது கணவர்களால் விவாகரத்து செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிகழ்விற்குப் பிறகு இளவரசி டயானா தனது 36 ஆவது வயதில் 1997 இல் நடைபெற்ற கார் விபத்தில் சிக்கி உயிரிழந்தார். அவரது உயிரிழப்பு உலகையே உலுக்கியது.

இந்த நேர்காணலில் டயானா குறித்த பேசிய ஃபென்குசன் நாங்கள் நிறை சிரித்தோம். நிறைய பிரச்சனைகளில் சிக்கினோம். அவர் எப்போதும் எனது நினைவில் இருக்கிறார் என்று கூறியிருப்பது பலரையும் கண்கலங்க வைத்திருக்கிறது.

NewsGlitz in Social Media
Share to your pages!
Close