என்னுடைய கடைசி காலம் வரை நடிப்பனு ஜோசியர் சொன்னார் .. . வெண்ணிறஆடை மூர்த்தி

என்னுடைய கடைசி காலம் வரை நடிப்பனு ஜோசியர் சொன்னார் .. . வெண்ணிறஆடை மூர்த்தி

நகைச்சுவை உணர்வுக்கு இவர்தான் டெப்போ, இரட்டை வசன அர்த்தங்களுக்கு முகவரி , இவருக்கு என்று தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கிக்கொண்டவர். மூன்று தலைமுறை நடிகர்களோடு நடித்தவர் என பல சிறப்புகளைப் பெற்றவர் வெண்ணிற ஆடை மூர்த்தி.

பல முன்னணி நடிகர்களோடும், நகைச்சுவை ஜாம்பவான்களோடும் ஸ்க்ரீன்ஐ பகிர்ந்துகொண்டவர். நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் குணச்சித்திர நடிகராகவும், முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்து முத்திரை பதித்தவர்.

Indiaglitz நேயர்களுக்கு நடிகர் வெண்ணிறஆடை மூர்த்தி அளித்த பிரத்யேக பேட்டி.....

நான் ஒரு Orthodox குடும்பத்தில் பிறந்தவன். எங்க வீட்ல சினிமா, டிவி எல்லாம் பார்க்க விடமாட்டாங்க. நான் பள்ளியில் படிக்கும்போது வீட்டிற்கு தெரியாமல் நாடகம், சினிமா பார்ப்பேன்.

நான் சட்டப்படிப்பு படித்திருக்கேன்.ஆனால் பயிற்சி செய்வதில்லை.

ஒரு முறை ஹோட்டலில் சாப்பிட்டுவிட்டு வெளியில் வரும்போது ஒருஜோசியம் சம்பந்தபப்ட்ட புத்தகம் கண்ணில் பட்டது.

அந்த புத்தகத்துல நம்ம ராசிக்கு என்ன போட்ருக்குனு பார்க்குற ஆர்வத்தில வாங்குனேன். ஆனா. அந்த புத்தகத்தில வினோதமாக இருந்த விஷயங்கள் என்னை ஈர்த்தது.

அந்த புத்தகத்தில் இருந்த நம்பருக்கு டயல் செய்து ஜோசியரை சென்று சந்தித்தேன். அவர்தான் சொன்னார் நீ வேலைக்கு எல்லாம் போகமாட்ட. நீ சினிமால நடிப்ப, அதுவும் குச்சி புடுச்சி நடக்குற வரை நடிப்பேன்னு சொன்னார். எனக்கு ஜோஷியமும் வரும், அதனால ஜோஷியமும் கத்துக்கணு அவர்தான் சொன்னார்.
அவரிடமே ஜோஷியமும் கற்றுக்கொண்டேன்.

வெண்ணிற ஆடைதான் என்னுடைய முதல் திரைப்படம். அதுல, ஸ்ரீகாந்த், ஜெயலலிதா, நிர்மலா மாலி, மேஜர் சுந்தரராஜன் இப்டி ஒரு பெரிய நட்சத்திர கூட்டமே அந்த படத்துல நடிச்சிருந்தோம். .

கமல் ஹாசன் நடித்த மாலைசூடவா படத்தின் கதை, வசனம் எழுதும் வாய்ப்பை பெற்றதில் இப்பவும் எனக்கு மகிழ்ச்சியே.

சன் டிவியின் மீண்டும் மீண்டும் சிரிப்பு மிகவும் பிரபலமானது. தொடர்ந்து 11 வருடம் ஒளிபரப்பானது. மக்களிடையே பெரும் வரவேற்பு பெற்ற நிகழ்ச்சி.

அந்த காலத்து இயக்குனர்கள் ஆகட்டும், இந்த காலத்து இயக்குனர் ஆகட்டும் எல்லாரும் திறமைசாலிகள்தான் அவர்களுக்கு கிடைத்த வாய்ப்பு, யுக்திகளை வைத்து அவர்கள் சாதித்துள்ளார்கள்.

உழைப்பை விட்றாதீங்க. உழைப்பினால் வரும் செல்வம்தான் மகிழ்ச்சிதரும்.

சினிமா குறித்த செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள indiaglitz பெரும் உதவியாக உள்ளது

இவ்வாறு பல விஷயங்களை வெண்ணிற ஆடை மூர்த்தி இந்த பேட்டியில் கலகலப்பாக பகிர்ந்துள்ளார்.

Trending Articles