திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே ஆயிலவாடி கிராமத்தில், மண்ணில் புதைந்து கிடந்த சுமார் 1000 ஆண்டு பழமையான ஆளவாய் சுந்தரேஸ்வரர் கோவில், பொதுமக்களின் அயராத முயற்சியால் மீண்டும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த அற்புதமான கண்டுபிடிப்பு பற்றிய முழு விவரங்களையும் இந்த வீடியோவில் காணலாம்.
கோவில் மீது மண் மூடி இருந்ததால், கோவிலின் இருப்பே தெரியாத நிலை இருந்தது. பொதுமக்கள், கோவிலின் முன்புறம் உள்ள ஒரு சிறிய வாசல் வழியாக பல ஆண்டுகளாக உள்ளே சென்று பூஜைகளை செய்து வந்தனர்.
இதையடுத்து, பொதுமக்கள் கோவிலின் மேல் பகுதியில் மண்ணால் மூடப்பட்டு இருந்த மண்ணையும் பக்க வாட்டில் இருக்கும் மண்ணையும் அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர். பழமை வாய்ந்த கோவிலின் மேல் உள்ள மண்ணை அகற்றும் பணியை பொதுமக்கள் ஆர்வத்துடன் வந்து பாத்து சாமி தரிசனம் செய்து சென்றனர்.
மேலும் பொதுமக்கள், தமிழ்நாடு அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்து கோவிலை ஆய்வு செய்து நிதி ஒதுக்கீடு செய்து கோவிலின் புனரமைப்பு பணிகள் மேற்கொண்டு பொதுமக்கள் வழிபாடு செய்வதற்கு முன் வர வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.