யூடுயுப் இன்ஸ்டா பக்கத்தில் நம்மில் பலர் இதை பார்த்து உள்ளோம் .பார்ப்பவர்களின் கண்களை கவரும் விதமாக உள்ள ஸ்மோக்கிங் பிஸ்கட் தற்போது ஒரு மனிதனின் உயிரையே பலி வாங்குகிறது என்றால் நம்புவீர்களா ?
கடந்த இரண்டு வாரத்திற்கு முன்பு சிறுவன் ஒருவன் இது போன்ற ஸ்மோக்கிங் பிஸ்கட் சாப்பிட்டு வயிற்று வலியால் துடித்த வீடியோ காட்சி இணையத்தில் வைரல் ஆனது.திரைப்பட படப்பிடிப்புக்கு புகைமூட்டமான காட்சிக்கு திரவ நைட்ரஜன் பயன்படுத்த படுகின்றன.
இப்போதெல்லாம் திருமண நிகழ்ச்சியில் ஸ்பெஷல் எபக்ட்ஸ்க்காகவும் டிஜே பார்ட்டிகளுக்காகவும் புகை எபக்ட்காக இந்த திரவ நைட்ரஜன் பயன்படுத்த படுகிறது.உணவுகளை உறைய வைக்கவும் ,அழுகி விடாமல் பாதுகாக்கவும் இவை பயன்படுத்தப்படும் இந்த நைட்ரஜன் உணவுகளில் பயன்படுத்தி அதனை கவர்ச்சிகரமாக தருவதால் பலரும் விரும்பி வாங்கி சாப்பிடுகின்றனர்.
ஆனால் கர்நாடக மாநிலத்தில் உள்ள ஒரு சிறுவனுக்கு இந்த ஸ்மோக் பிஸ்கட் சாப்பிட்டு வயிற்று வலியால் அலறி துடித்த காட்சி பலரை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.அங்கு நடந்த ஒரு பொருட்காட்சியில் திரவ நைட்ரஜன் கலந்த தின்பண்டத்தை உண்டு மயக்கம் அடைந்த சிறுவனின் நிலை என்ன ?ஏன் இப்படி நடந்தது ?
பார்க்க கண்கவரும் என்பதால் குழந்தைகள் ஆசையாக கேட்கும் இந்த தின்பண்டத்தில் உள்ள லீகுய்ட் நைட்ராஜன் ஒரு துளியேனும் உண்டால் அது உயிருக்கே ஆபத்து என மருத்துவர்கள் பலர் கூறியுள்ளனர்.இது ட்விட்டரிலும் பகிரப்பட்டு வருகின்றன.மேலும் இதை தமிழக அரசு தடை செய்ய வேண்டும் என்னும் கண்டனம் முன் வைக்கப்பட்டுள்ளன.
ஸ்மோக்கிங் பிஸ்கட் சாப்பிடும்போது வாயில் இருந்தும் மூக்கின் துவாரங்களில் இருந்தும் புகை வருவது இன்றைய தலைமுறைகளுக்கு மிகவும் பிடித்த ஒன்றாகி விட்டது.ஆனால் இதற்கு பின்னால் பயங்கரமான ஆபத்து உள்ளதாக எச்சரிக்கின்றனர் மருத்துவ ஆலோகர்கள்.திரவ நிலை நைட்ரஜன் வெப்பநிலை 196 டிகிரி செல்சியஸ் ஆகும்.
காற்று பட்ட சில நொடிகளில் ஆவியாகும் இதனை பிஸ்கட்டில் நெனைத்து சாப்பிடும்போது அவை ஆவியாகி புகையுமாக வெளிவருகின்றன.திரவநிலை நைட்ரஜன் உடலில் உள்ள திசுக்களை அழிக்கின்றன,வெறுமனே வயிற்று வலி மட்டுமே வரும் இதில் சில சமயங்களில் உயிரையே பறிக்கும் ஆபத்தும் விளைவும் ஏற்பட அதிகபட்ச வாய்ப்பு உள்ளது என ஆலோகர்கள் கூறுகின்றனர்.