இந்தியா , பங்களாதேஷ், பாகிஸ்தான் போன்ற பல நாடுகளுக்கு சவூதி அரேபியா விசா தடையை அறித்துள்ள நிலையில், அது, அந்த நாடுகளிலிருந்து புனித ஹஜ் யாத்திரை மேற்கொள்ளூம் ஆயிரக்கணக்கானவர்களுக்கு பெருத்த ஏமாற்றம் அளிக்கும் வகையில் அமைந்துள்ளதாக பல்வேறு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த ஆண்டில், ஹஜ் யாத்திரை தொடங்குவதற்கு முன்பாகவே, சவூதி அரேபிய அரசு 14 நாட்டு குடிமக்களுக்கு தற்காலிக விசா தடையை அறிவித்துள்ளது.
ஹஜ் யாத்திரையின் போது இங்கு ஏற்படும் பயங்கரமான கூட்ட நெரிசலை கையாள்வதற்காகவும், முறையாக பதிவு செய்யாத ஹஜ் யாத்திரிகர்களை தடுப்பதற்காகவும், இந்த விசா தடை அமல் செய்யப் பட்டுள்ளதாக சவூதி அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும் கடந்த ஆண்டுகளில் பதிவு செய்யாமல் யாத்திரையில் ஈடுபட்டவர்களால் ஏற்பட்ட நெரிசலாலும், கடும் வெப்பத்தாலும் ஏற்பட்ட விபத்துகள் மீண்டும் நிகழாமல் தடுப்பதும் இந்த தடையின் நோக்கமாகும்..
சவூதி இளவரசர் முகமது பின் சல்மான் விசா விதிமுறைகளை மேம்படுத்த அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். திருத்தப் பட்ட விதிகளின் படி, இந்த ஆண்டு ஹஜ் பயணம் மேற்கொள்ள வழங்கப்படும் ஜஹ் உம்ரா விசாவிற்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் ஏப்ரல் 13, 2025 ஆகும். ஹஜ் முடியும் வரை புதிய உம்ரா விசாக்கள் எதுவும் வழங்கப் படாது.
இந்தியா உள்பட 14 நாடுகளுக்கு விசா வழங்குவதை தடை செய்வதாக சவூதி அரேபியா அறிவித்துள்ளது
schedulePublished Apr 7th 25
thumb_upLike
commentComments
shareShare
schedulePublished Apr 7th 25