மஹி ராக்ஸ்டார்… கத்தியபடியே சிஎஸ்கே வெற்றியைக் கொண்டாடிய பாலிவுட் பிரபலம்… வைரல் வீடியோ!

thumb_upLike
commentComments
shareShare

மகேந்திரசிங் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஐந்தாவது முறையாக ஐபிஎல் கோப்பையை வென்றுள்ளது. இந்த வெற்றியை ஒட்டுமொத்த இந்திய பிரபலங்கள், ரசிகர்கள் எனப் பலரும் கொண்டாடி வரும் நிலையில் மைதானத்தில் இருந்தபோது பாலிவுட் பிரபலங்கள் இருவர் கத்திக்கொண்டு உற்சாகத்தை வெளிப்படுத்திய வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

பாலிவுட் சினிமாவில் வளர்ந்து வரும் பிரபலங்களாக இருக்கும் நடிகை சாரா அலிகான் மற்றும் நடிகர் விக்கி கௌஷால் இருவரும் இணைந்து ‘ஜரா ஹட்கே ஜரா பச்கே’ எனும் திரைப்படத்தில் நடித்துள்ளனர். விவகாரத்துப் பெறுவதற்காகப் போராடும் கதையம்சம் கொண்ட இந்தத் திரைப்படத்தின் டிரெய்லர் மே 15 ஆம் தேதி வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. மேலும் படத்தின் புரமோஷன் வேலைகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் பட புரமோஷனுக்கு இடையே நடிகை சாரா அலிகான் மற்றும் நடிகர் விக்கி கௌஷால் இருவரும் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் இறுதிப்போட்டியில் கலந்துகொண்டனர். துவக்கம் முதலே சிஎஸ்கேவின் வெற்றியை எதிர் நோக்கி காத்துக்கொண்டிருந்த இந்த பிரபலங்கள் இருவரும் சிஎஸ்கே வெற்றியைத் தட்டிச்சென்ற போது கத்திக்கொண்டே தங்களது உற்சாகத்தை வெளிப்படுத்தினர்.

மேலும் மஹி ராக்ஸ்டார் என்று நடிகர் விக்கி கௌஷால் கத்திக்கொண்டே பெருமூச்சு விட்டார். இதுகுறித்த வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகிய நிலையில் வைரலாகியுள்ளது.

நடிகை சாரா அலிகான் மற்றும் விக்கி கௌஷால் நடித்த ஜரா ஹட்கே ஜரா பச்கே’ திரைப்படம் வரும் ஜுன் 2 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இந்நிலையில் இந்தப் பிரபலங்கள் சிஎஸ்கே போட்டியை ரசித்துப் பார்த்ததோடு வெற்றியைக் கொண்டாடி தீர்த்த வீடியோ இணையத்தில் கவனம் பெற்றிருக்கிறது.

NewsGlitz in Social Media
Share to your pages!
Close