தளபதி விஜய் தமிழக வெற்றிக்கழகம் என்ற அரசியல் கட்சியை ஆரம்பித்துள்ள நிலையில் அவர் வரும் 2026 ஆம் ஆண்டு நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட போவதாகவும் அதற்கு இடையில் இருக்கும் இரண்டு ஆண்டுகள் தனது கட்சியை மக்கள் மத்தியில் கொண்டு போய் சேர்க்கும் பணியில் அவர் ஈடுபட போவதாகவும் கூறப்படுகிறது.
இதற்காகவே அவர் இன்னும் ஒரே ஒரு படத்தில் மட்டும் நடித்து விட்டு முழு நேர அரசியல்வாதியாக மாறப் போகிறார் என்றும் அவரது ரசிகர்களும் கட்சியின் தொண்டர்களாக மாறி கட்சியின் கொள்கைகளை மக்கள் மத்தியில் பரப்பும் பணியில் ஈடுபட ஆரம்பித்துவிட்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் விஜய்க்கு அரசியல் ஆலோசகராக பிரசாந்த் கிஷோர் இருப்பார் என்று கூறப்பட்ட நிலையில் இது குறித்து அவரே விளக்கம் அளித்துள்ளார். விஜய்க்கு நான் ஆலோசகராக மாட்டேன், விஜய் விரும்பி கேட்டாலும் கூட அவருக்கு முழு நேர ஆலோசகராக இருக்கும் எண்ணம் எனக்கு இல்லை என்றும் தெரிவித்தார்.
ஆனால் அதே நேரத்தில் என்னை மதித்து என்னிடம் வருபவர்களுக்கு என்னால் முடிந்த அறிவுரைகளை கொடுப்பேன் என்றும் அவர் கூறினார். மேலும் வரும் பாராளுமன்ற தேர்தலில் அவர் எந்த தமிழக கட்சிக்கும் ஆலோசகராக இருக்க போவதில்லை என்றும் இந்த செய்திகள் வெளியாகி உள்ளது.