திருமணமாகி ஓராண்டுகளைக் கடந்த பின்பும் தனது கணவன் உடலுறவுக்கு மறுப்பு தெரிவிக்கிறார், விவாகரத்துக்கு முயற்சித்தாலும் அதற்கும் ஒப்புக்கொள்ளாமல் இருக்கிறார் என்று இளம்பெண் ஒருவர் காவல் நிலையத்தில் புகார் அளத்திருப்பது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகா மாநிலத்தின் ஹாசன் பகுதியில் வசித்து வந்த இளைஞர் ஒருவருக்கும் மாண்டியா பகுதியில் வசித்துவந்த 21 வயது இளம்பெண் ஒருவருக்கும் பெற்றோர்களின் சம்மதத்துடன் திருமணம் நடைபெற்று இருக்கிறது. கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு இந்தத் திருமணம் நடைபெற்ற நிலையில் தன்னுடன் உடலுறவு கொள்ள கணவன் மறுக்கிறார் என்று கூறி அந்த இளம்பெண் தற்போது பரப்படை அக்ரஹாரா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
மேலும் தன்னுடைய கணவன் குறித்து பேசிய அந்த இளம்பெண் திருமணம் குறித்து ஏராளமான கனவுகளை வைத்திருந்தேன். ஆனால் எல்லாவற்றையும் நொறுக்கிவிட்டார். சிறுசிறு விஷயங்களுக்குக் கூட கடுமையாகக் கோபமடைகிறார். ஓராண்டாக அவர் உடலுறவு கொள்ளளவும் மறுப்பு தெரிவிக்கிறார். இதனால் பரஸ்பர ஒப்புதலுடன் விவாகரத்துக்கு முயற்சிப்பதிலும் அவருக்கு விருப்பம் இல்லை. அவரிடம் காதலும் இல்லை. இருவருக்கும் எந்த விஷயத்திலும் ஒத்துப்போகவும் இல்லை என்று தனது புகாரில் தெரிவித்துள்ளார்.
நகரத்திற்கு வெளியே உள்ள பாதுகாப்பு சேவை நிறுவனம் ஒன்றின் மேலாளராக பணியாற்றி வரும் தனது கணவன் குறித்து இளம்பெண் ஒரவர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருப்பது பலருக்கும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதேபோன்று விவாகரத்து கோரிய வழக்கு ஒன்றில் தீர்ப்பு வழங்கிய அலகாபாத் நீதிமன்றம், எந்த காரணமுமின்றி தங்களது துணையோடு உடலுறவு கொள்வதற்கு மறுப்பு தெரிவிப்பது அவர்களுக்கு மனவலியைக் கொடுப்பதற்கு சமம் என்று கூறியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.