ஆண்டுக்கு 12 லட்சம் வரை வருமானம்.. வருமான வரி கிடையாது: பட்ஜெட்டில் சூப்பர் அறிவிப்பு..!

மாதம் ஒரு லட்சம் ரூபாய் வரை வருமானம் பெறுபவர்கள் அதாவது ஆண்டுக்கு 12 லட்சம் வருமானம் பெறுபவர்களுக்கு வருமான வரி கிடையாது என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சற்றுமுன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த பட்ஜெட்டின் போது அறிவித்துள்ள நிலையில் இந்த அறிவிப்பு நடுத்தர வர்க்கத்தினருக்கு மிகப்பெரிய வரப்பிரசாதமாக கருதப்படுகிறது.

இந்த அறிவிப்பின்படி ஆண்டு வருமானம் 12 லட்சம் பேர் வருமானம் பெறுபவர்கள் 80 ஆயிரம் வரை வருமான வரி சலுகை பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 2023 ஆம் ஆண்டு வருமான வரி உச்சவரம்பு 5 லட்சத்திலிருந்து 7 லட்சமாக உயர்த்தப்பட்ட நிலையில் இந்த ஆண்டு அது 12 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.

அதேபோல் வீட்டு வாடகை டிடிஎஸ் வருடாந்திர வரம்பை 2.40 லட்சம் ரூபாயில் இருந்து 6 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் மூத்த குடிமக்களுக்கு ரூ.50,000 வரி பிடித்தம் இல்லை என நிதியமைச்சர் அறிவித்துள்ளார்.

Trending Articles