இந்த நிலநடுக்கத்தில் 1,600 க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர் மற்றும் 3,400 க்கும் மேற்பட்டவர்களைக் காணவில்லை. தேடுதல் மற்றும் மீட்பு முயற்சிகள் தொடர்வதால் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மியான்மரை வெள்ளிக்கிழமை தாக்கிய 7.7 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் 334 அணு குண்டுகளுக்கு சமமான ஆற்றலை வெளியிட்டதாக புவியியலாளர் ஜெஸ் ஃபீனிக்ஸ் தெரிவித்துள்ளார். இந்திய புவியோட்டுத் தகடு(tectonic plate)தொடர்ந்து யூரேசிய புவியோட்டுத் தகட்டுடன் மோதியதால் நிலநடுக்கங்களுக்குப் பிந்தைய அதிர்வுகள் இன்னும் பல மாதங்கள் வரை நீடிக்கும் என்று அவர் எச்சரித்தார்.
மியான்மரின் இரண்டாவது பெரிய நகரமான மாண்டலேயில், நிலநடுக்கங்களுக்குப் பிறகு கட்டிடங்கள் இடிந்து விழுலாம் என்ற அச்சம் காரணமாக பல குடியிருப்புவாசிகள் வீட்டை விட்டு வெளியேறினர். ஞாயிற்றுக்கிழமை அன்று ஏற்பட்ட 5.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தின் போது, மியான்மர் தெருக்களில் பீதி நிறைந்த மக்களின் கூக்குரல் ஒலித்துக் கொண்டே இருந்தது.