கமலா செல்வராஜ் தமிழ்நாட்டைச் சேர்ந்த பிரபலமான மகப்பேறு மருத்துவர் ஆவார் . தமிழ் திரைப்பட நடிகர் காதல் மன்னன் ஜெமினி கணேசனின் மகளாவார்.
மூட்டை மூட்டையாக அப்பாவுக்கு காதல் கடிதம் வரும், உங்க வீட்டு சமையற்காரியாவாவது என்ன வச்சிக்கோங்க என பல பெண்கள் வீட்டு வாசலில் வந்து நிற்பார்கள் என காதல் மன்னன் குறித்து அவரது மகள் புகழ்பெற்ற மகப்பேறு மருத்துவர் கமலா செல்வராஜ் கூறியுள்ளார்.
Indiaglitz நேயர்களுக்கு அவர் அளித்த பேட்டியில் .....
எங்க அப்பா குடும்பத்தை மிகவும் நேசிப்பவர். ஆரம்ப காலகட்டத்தில் அவர் மிகவும் கஷ்டபட்டுள்ளார். அவர் அம்மாவின் மீது மிகுந்த மரியாதையை கொண்டவர்.
சாவித்ரியை எங்க அப்பா ஏற்றுக்கொண்டார். அவரின் பிள்ளைகள் அப்பா பேர் தெரியாமல் வளர்ந்துவிடக்கூடாது என்பதற்காக பொதுவெளியிலேயே அவர்களின் உறவினை ஒப்புக்கொண்டார்.
அப்பாவுக்கும் அம்மாவுக்குமான bondage உறுதியானது. என் அம்மாவிற்கு உலகமே அப்பாவும், அப்பாவின் அம்மாவும்தான்.
அப்பா மாறி ஒரு அழகான ஆணை நான் இதுவரை சந்திக்கவில்லை. மிகவும் பண்பானவர். குரான், பைபிள், மஹாபாரதம் என அனைத்தையும் படித்தவர். வேதியியல் பேராசியர்.
அவர் உடல்நிலை சரியில்லாதபோது நான் ஏன் இப்டி பண்ணேன்னு கேட்டார். நாங்க சொன்னோம், அதையெல்லாம் விடுங்க அப்பா. நாங்க உங்களை நல்லா பார்த்துக்குறோம். நீங்க உங்க உடம்பை பார்த்துக்கோங்கன்னு சொன்னோம். அவர் செய்ததை நினைந்து வருத்தப்பட்டார்.
நடிகையர் திலகம் னு கீர்த்தி சுரேஷ் நடித்த சாவித்ரி அவர்களின் பயோ பிக் படைத்த எடுத்த நாக் அஸ்வின் எங்களிடம் எந்த அனுமதியும் பெறவில்லை.
அப்பாதான் அவங்களுக்கு குடிக்க கத்துக்குடுத்த மாதிரி ஸீன் இருக்கு படத்துல. இதை எப்படி ஏத்துக்க முடியும் ?
சாவித்ரி அம்மாவ எனக்கு பிடிக்கும்,ஆனா அவங்க அகங்காரம் பிடிச்சவங்க. அவங்க எங்களுக்கு பண்ணத எல்லாம் நினைக்கும்போது அவங்க ரொம்ப மோசமானவங்க.
என இந்த பேட்டியில் கமலா செல்வராஜ் கூறியுள்ளார்.