அடுத்தவர் மனதை புண்படுத்த தெரியாது, ஒரு வசனம் சொன்னால் அதை சொல்லி முடிப்பதற்குள் ஒரு ஜோக் அடிப்பார் அதுதான் கிரேசி மோகன். அவர் எழுத்தை பார்த்து எனக்குள் தாழ்வு மனப்பான்மை வந்தது என பிரபல வசனகர்த்தா கிரேசி மோகன் குறித்து மனம் திறக்கிறார் இயக்குநரும், நடிகருமான விசு.
கிரேசி மோகன் தமிழ்த் திரையுலகில் கதை-வசன கர்த்தாவாகவும், நடிகராகவும் முத்திரை பதித்தவர். இது தவிர டிவி சீரியல்களில் நடித்தும், பல மேடை நாடகங்களை இயக்கியவரும் ஆவார்.
அருணாச்சலம், அவ்வை சண்முகி, பஞ்சதந்திரம், காதலா, காதலா தெனாலி, பம்மல் கே சம்பந்தம், வசூல்ராஜா எம்.பி.பி.எஸ் மற்றும் மைக்கல் மதன காம ராஜன் போன்ற வெற்றிப்படங்களுக்கு வசனம் எழுதிய பெரும் புகழுக்கு சொந்தக்காரர்.
இயக்குநரும்,நாடிகரும், அரட்டை அரங்க புகழ் விசு அளித்த பேட்டியில் ......
எஸ்.வி சேகர் நடித்து, கிரேஸி மோகன் வசனத்தில் தி கிரேஸி தீவ்ஸ் இந்த பாலவாக்கம் நாடகம் பார்த்துட்டு நான் பிரமித்துவிட்டேன். உண்மையை சொல்லவேண்டும் என்றால் அந்த காலகட்டத்தில் எனக்குள் ஒரு தாழ்வு மனப்பாண்மை தோன்றியது.
இந்த 16 லிருந்து 30 வயதுள்ள கூட்டத்தை அப்படியே அவன் வசம் படுத்தினான். கிரேஸி என்னைவிட வயதில் சிறியவன், ஆனால் அவன் பேனா என்னை விட மூத்தது.
என்னுடைய முதல் படம் மழலைப்பட்டாளம் வாய்ப்பு எனக்கு கிரேஸி மோகனால் வந்தது.
வெறும் படங்களுக்கு வசனம் எழுதி கிரேஸி புகழ்பெறவில்லை. அவருடைய புகழ் நாடகங்களால் வந்தது. உலக நாடுகளுக்கு எல்லாம் சென்று, ஆயிராக்கணக்கான மனிதர்களை சந்தித்து அவர் ரசிகர்களின் மனதை வென்றிருக்கிறார்.
அவர் வருத்தப்பட்டதுண்டா ? கிரேஸி மோகனுக்கு வேறு முகம் எதுவும் உண்டா என்று அவர் மனைவியிடம் கேட்க வேண்டும்.
மாது, பாலாஜி, சோர்ந்து விடாதீர்கள். சோகத்தை முதுகுக்குப்பின் வைத்துக்கொண்டு எழுந்து வாருங்கள். ஆல் தி பெஸ்ட் டு crazy ட்ரூப்ஸ்
என இயக்குநர் விசு பேசியுள்ளார்.