ஜெமினியை சாவித்ரி காதலித்தது தவறு, எல்லோருக்கும் ஒரு Dark side உண்டு... Actor ராஜேஷ்,

ஜெமினியை சாவித்ரி காதலித்தது தவறு, எல்லோருக்கும் ஒரு Dark side உண்டு...  Actor ராஜேஷ்,

நடிகை சாவித்ரியோடு Private Affair ல் ஈடுபட்ட சிலரை எம்.ஜி.ஆர் கூப்பிட்டு மிரட்டினார் என்றும், வாழ்க்கையில் எல்லோருக்கும் இன்னொரு முகம் இருக்கிறது என்றும் நடிகையர் திலகம் சாவித்ரி குறித்து நடிகர் ராஜேஷ் கூறியுள்ளார்.

மேலும் அவர் இந்த பேட்டியில் பேசியிருப்பதாவது;-

நான் ஷூட்டிங்கில் இருந்தபோது, அதன்பின்புற வீட்டில்தான் சாவித்ரி இருந்தார். நான் பார்க்க சென்றிருந்தேன். அவர் மகன் சதீஷ்தான் உள் அழைத்து சென்றார். அப்படி அவரை நான் பார்த்ததை மறக்க முடியாது. உடலில் உயிர் மட்டும்தான் இருந்தது.

சாவித்ரி ஜெமினிகணேசனை திருமணம் செய்திருக்க கூடாது. அவர்தான் குடிக்க சொல்லிக்கொடுத்தார் என்றும் சொல்ல கூடாது.

சாவித்ரி சொத்து போய்விட்டது, வீடு ஜப்திக்கு வந்துட்டது அவரிடம் கொடுக்க ஒன்றும் இல்லை. அப்போது அவர் கார் ஓட்டுநர் அம்மா நான் போகிறேன் என்று சொன்னபோது, அவர் பயன்படுத்திய காரை டிரைவரிடம் கொடுத்துவிட்டார். அந்த டிரைவர் கேரளா சென்று நிறைய பொருளீட்டி சமீபத்தில்தான் இறந்தார்.

ஜெமினி ஒரு Orthodox பிராமண குடும்பத்தை சேர்ந்தவர். சாவித்ரியும், ஜெமினியும் பல காலம் பிரிந்து வாழ்ந்தும், சாவித்ரி மறைந்தபோது அவரை ஜெமினி தன் வீட்டில் கொண்டு வந்து வைத்திருந்தார். அதற்கு ஜெமினியின் முதல் மனைவி எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை.

சாவித்ரிக்காக எம்.ஜி. ஆர் கெட்ட பெயரை அவர் ஏற்றுக்கொண்டார். சாவித்திரியின் Private Affair ல் ஈடுபட்ட சிலரை கண்டித்திருக்கிறார். சிலரை பழிவாங்கியும் இருக்கிறார்.

ஆனால், சாவித்ரிக்கு எம். ஜி. ஆர் உடன் நடிப்பதில் பெரிய ஈடுபாடில்லை. ஜெமினி மாமா மீது இருந்த அதீத காதல்தான் சாவித்ரியின் வீழ்ச்சிக்கு காரணம்.

சென்னை, பக்கத்துல பிராப்தம் னு ஒரு படம் ஷூட்டிங் நடைபெற்றுக்கொண்டிருந்தது. அந்த பகுதியில் உள்ள சூர்யகாந்த் என்ற நபர் உள்ளுர்வாசி. செல்வாக்கு மிக்கவர். அவர் சாவித்ரியை பார்த்து பாசமலர் படம் குறித்து சிலாகித்து பேசியுள்ளார். அங்கு ஷூட்டிங்கு தேவையானதை எல்லாம் செய்து கொடுத்துள்ளார். ஒரு நாள் ஒரு பெரிய மீனை எடுத்துக்கொண்டு சாவித்ரி வீட்டுக்கு வந்துட்டார்.

சாவித்திரியும் அந்த மீனை அப்போதே சமைத்து இரவு உணவாக அந்த ரசிகனுக்கு கொடுத்து, இரவு தங்கவைத்து, காலையில் காபியும் கொடுத்து வழியனுப்பி வைத்துள்ளார். எந்த நடிகையும் இப்படி செய்ய வாய்ப்பில்லை.

இவ்வாறு சாவித்ரி குறித்த பல்வேறு விஷயங்களை நடிகர் ராஜேஷ் பகிர்ந்துள்ளார்.

Trending Articles