இந்திய கிரிக்கெட் அணியில் ஆல் ரவுண்டர் வீரராக வலம் வந்து கொண்டிருக்கும் ஹர்திக் பாண்ட்யா தனது மனைவி நடிகை நடாஷாவை விவாகரத்து செய்யவுள்ளதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்துள்ளது ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் ஹர்திக் பாண்ட்யா என்பதும் அவர் பந்துவீச்சு பேட்டிங் ஆகிய இரண்டுமே ஜொலித்து வருகிறார் என்பதும் தெரிந்தது. இந்த நிலையில் கடந்த 2000ஆம் ஆண்டு நடிகை மற்றும் நடன கலைஞரான நடாஷாவை ஹர்திக் பாண்ட்யா திருமணம் செய்த நிலையில் இந்த தம்பதிக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது.
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் திடீரென நடாஷா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பாண்ட்யா என்ற குடும்ப பெயரை நீக்கிய நிலையில் இருவருக்கும் கருத்து வேறுபாடு என்றும் விரைவில் விவாகரத்து செய்யப் போவதாகவும் செய்திகள் வெளியாகின.
இந்த நிலையில் ஹர்திக் பாண்ட்யா தனது இன்ஸ்டாவில் மனைவி நடாஷாவை விவாகரத்து செய்ய போவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். 4 ஆண்டு குடும்ப வாழ்க்கைக்கு பின்னர் நானும் எனது மனைவியும் பிரிய முடிவு செய்துள்ளோம். இருவரும் சேர்ந்து வாழ செய்த அனைத்து முயற்சிகளும் தோல்வி அடைந்ததை அடுத்து பிரிய முடிவு செய்துள்ளோம். இது நாங்கள் எடுத்த கடினமான முடிவு தான்’ என்றும் தெரிவித்துள்ளார்.
இந்த 4 ஆண்டுகளில் எங்கள் மத்தியில் இருந்த மகிழ்ச்சி, மரியாதை ஆகியவற்றை கருத்தில் கொண்டு சுமூகமாக பரஸ்பரம் பிரிய முடிவு எடுத்துள்ளோம். ஆனால் அதே நேரத்தில் எங்கள் மகனுக்கு ஒரு பெற்றோராக செய்ய வேண்டிய கடமையை கண்டிப்பாக செய்வோம் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் இந்த கடினமான நேரத்தில் எங்கள் தனியுரிமையை மதித்து ஆதரவளிக்க வேண்டுகிறோம் என்றும் ஹர்திக் பாண்ட்யா அந்த பதிவில் தெரிவித்துள்ளார்.
ஹர்திக் பாண்ட்யா மனைவி நடாஷா ஒரு நடிகை என்பதும் இவர் பல ஹிந்தி திரைப்படங்களில் ஒரு பாடலுக்கு நடனமாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் பிக் பாஸ் ஹிந்தி சீசன் 8 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு 28 நாட்களில் வெளியேறியவர் என்பது குறிப்பிடத்தக்கது.