ஆந்திராவில் ஜெமினி வில்லன், அக்காவோடு மன வருத்தம்... சாவித்ரி மகள் விஜயா சாமுண்டீஸ்வரி

ஆந்திராவில் ஜெமினி வில்லன்,  அக்காவோடு மன வருத்தம்... சாவித்ரி மகள் விஜயா  சாமுண்டீஸ்வரி

நடிகர் ஜெமினிகணேசனுக்கும், நடிகை சாவித்ரி தம்பதியர்களுக்கு விஜயா சாமுண்டீஸ்வரி என்ற மகளும், சதீஸ்குமார் என்ற மகனும் உள்ளனர்.

நடிகையர் திலகம் என்ற சாவித்ரியின் பயோ பிக் திரைப்படம் வெளியாகி பெரும் வரவேற்பு பெற்றிந்தாலும், அந்த திரைப்படம் ஜெமினி மற்றும் சாவித்ரி குடும்பத்தில் பிரிவினையையும் உண்டாக்கியுள்ளது என்பதை மறுக்க முடியாது.

காதல் மன்னன் ஜெமினி கணேசனுக்கும், நடிகையர் திலகம் சாவித்ரிக்கும் பிறந்த விஜயா சாமுண்டீஸ்வரி Indiaglitz நேயர்களுக்கு அளித்த பேட்டியில்....

" ஆந்திராவில்,அப்பாவை யாருக்கும் தெரியாது. அம்மாவை எல்லோருக்கும் தெரியும். அவர் ஆந்திராவில் பிறந்தவர். அப்பாவை திருமணம் செய்ததால்தான் அம்மாவுக்கு இந்த நிலைமை வந்தது என ஆந்திர மக்கள் கருதினர். அப்பாவை ஆந்திராவில் வில்லனாக பார்த்தார்கள்.

என் அம்மா அழகானவர் என்பது எல்லோருக்கும் தெரியும். ஆனால் அவர்கள் மதுவுக்கு அடிமையான பிறகு அவர் முகத்தின் பொலிவு மாறிவிட்டது.

அம்மாவுக்கு ஷாக் ட்ரீட்மெண்ட் குடுப்பாங்க, ட்ரீட்ட்மென்ட் க்கு அப்பறம் அம்மா அப்டியே கருகிப்போன மாறி போய்டுவாங்க.

அப்பா அம்மா ரெண்டு மிகப்பெரிய ஸ்டார். சினிமாத் துறையில சோசியல் ட்ரிங்கிங் அப்டிங்குறது இருக்கத்தான் செய்யுது. அப்பாதான் அம்மாவுக்கு குடிக்க கத்துத் தந்தாங்கனு சொல்றதுல உண்மை இல்லை.

கீர்த்தி சுரேஷ் நடிச்ச அம்மா பற்றியபடம் இது. அப்பாவ மேலோட்டமாக காட்டியிருப்பாங்க. அவர் அம்மாக்கு தமிழ் பேச பயிற்சி, குதிரை ஓட்ட பயிற்சி, கார் ஓட்ட பயிற்சி இப்டி எல்லாமே அப்பாதான் சொல்லி கொடுத்தாரு.

ஜால்ரா அடிக்கிறவங்க அம்மா பக்கத்தில இருந்தது ஒரு மிகப்பெரும் குறை. அவங்களுக்கு நல்லது சொல்ல ஆள் இல்லை. அப்பாவை கூட அந்த ஜால்றா கும்பல் நெருங்க விடலை.

கீர்த்தி சுரேஷ் அப்டியே எங்க அம்மாவை கண் முன் கொண்டுவந்து நிறுத்திட்டாங்க. நான் ஒரு ஷூட்டிங் போயிருந்தேன், அப்போ கீர்த்தி டிரஸ் பண்ணிட்டு இருந்தாங்க.... கொஞ்சம் வெயிட் போட்ட மாதிரி இருக்கணும், அதனால டிரஸ் பண்ணிக்க கொஞ்ச நேரம் எடுத்துகிட்டாங்க கீர்த்தி. அப்புறம் அவங்க டிரஸ்ஸிங் முடிச்சிட்டு நடந்து வரும்போது நான் அசந்துட்டேன். அவங்களை அப்டியே கட்டி பிடித்துகொண்டேன்.

கீர்த்தி நடை அப்படியே என் அம்மாவின் நடை போல இருந்தது. நான் எப்படி என்று கேட்டேன் " அதெல்லாம் ஒன்னும் இல்லை, இது நார்மல் வாக் என்று கீர்த்தி சொன்னார். அது அவருக்கு இயற்கையாவே இருந்துருக்கு.

அம்மா வீட்டை விட்டு ஷூட்டிங் கிளம்பும்போது, அவருடைய பர்ஸ் நிறைய பணம் எடுத்துக்கொண்டு வெளியில் வருவார். வீட்டு வாசலின் இருபுறமும் ரசிகர்களும், ஏழைகளும் நின்றுகொண்டு வீட்டில் கல்யாணம், மகள், மகன் படிப்பு, நோய்வாய் என்று கேட்பவர்களுக்கு எல்லாம் அம்மா வாரி வழங்குவார்.

என நடிகையர் திலகம் சாவித்ரி குறித்தும், தந்தை ஜெமினி குறித்தும் பல விஷயங்களை பகிர்ந்துள்ளார்.

Trending Articles