விஜய்க்கு அரசியல் ரீதியாக எனது ஆதரவு இல்லை: விஷால் பட தயாரிப்பாளர் அறிவிப்பு..!

thumb_upLike
commentComments
shareShare

விஜய்க்கு அரசியல் ரீதியாக எனது ஆதரவு இல்லை என்றும் விஜய்யின் அரசியல் தனக்கு மிகுந்த கவலை அளிக்கிறது என்றும் விஷால் படத்தை தயாரித்த தயாரிப்பாளர் தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் மத்திய அரசு சிஏஏ சட்டத்தை அமல்படுத்துவதாக அறிவித்த நிலையில் பல தமிழக அரசியல்வாதிகள் இதற்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் விஜய் தனது முதல் அரசியல் அறிக்கையாக சிஏஏ சட்டத்திற்கு கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டிருந்தார்.

அந்த அறிக்கையில் அவர் கூறியிருந்ததாவது: சமூக நல்லிணக்கத்துடன் நாட்டு மக்கள் அனைவரும் வாழும் சூழலில், பிளவுவாத அரசியலை முன்னிறுத்தி செயல்படுத்தும் இந்திய குடியுரிமை திருத்தச் சட்டம் 2019 போன்ற எந்த சட்டமும் ஏற்கத்தக்கது அல்ல. தமிழ்நாட்டில் சட்டத்தை நடைமுறைப்படுத்த மாட்டோம் என்று ஆட்சியாளர்கள் உறுதி அளிக்க வேண்டும் என்று தெரிவித்து இருந்தார்.

இந்நிலையில் விஜய்யின் அறிக்கைக்கு விஷால் நடித்த ’மார்க் ஆண்டனி’ என்ற படத்தை தயாரித்த வினோத் தனது சமூக வலைத்தளத்தில் கூறியிருப்பதாவது: இதற்கு பிறகு நடிகர் விஜய் மீது நடிகராக மட்டுமே ஆதரவு, அரசியல் ரீதியாக ஆதரவு இல்லை. மேலும் அவரது அரசியல் குறித்து எனக்கு கவலையாக உள்ளது. புஸ்ஸி ஆனந்த் போன்ற நபர்களுடன் சேர்ந்து அவர் எதுவும் சாதிக்கப் போவதில்லை’ என்று குறிப்பிட்டுள்ளார்.

தயாரிப்பாளர் வினோத்தின் இந்த பதிவுக்கு விஜய் ரசிகர்கள் தங்களது கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.

 
NewsGlitz in Social Media
Share to your pages!
Close