சவூதி அரேபியாவின் செங்கடல் துறைமுகமான ஜெட்டாவில் நடந்த கார் பந்தய விழாவை பல பிரபலங்கள் சிறப்பித்தனர். ஆனால், அதையும் கடந்து பார்வையாளர்கள் ஒரு புத்தம் புதிய வியப்புக்குரிய அம்சத்தால் ஈர்க்கப் பட்டனர்.
சவுதி அரேபியாவின் வணிக மையமான ஜெட்டாவிலிருந்து பழைய வணிக குடும்பத்தினர் வெளியேறி விட்டதால் அது ஒரு புறக்கணிக்கப் பட்ட நகரமாகவே மாறிவிட்டிருந்தது. ஆனால், சமீபத்தில் சவுதி அரசு உருவாக்கிய ”விஷன் 2030 திட்டம்” அதன் பொருளாதாரத்தை மேம்படுத்த, கலாச்சாரத்தை புதுப்பிப்பதன் மூலம் சுற்றுலா வருவாயை அதிகரிப்பதை முன்னிலைப் படுத்துகிறது. இதனால், பழைய நகரம் பழமை மாறாமல் புதுப்பிக்கப் பட்டிருக்கிறது.
அல்- பாலத் - அரபியில் ’நகரம்’ என்ற பொருள் படும் இந்த இடம், பாலைவன மணலையும், கடலையும் பிரதிபலிக்கும் விதமாக அரேபிய பாணியில் அமைந்த பழுப்பு மற்றும் நீல நிற மரத்தாலான கட்டிடக் கலையுடன், கடந்த நூற்றண்டுகளின் வாசனை கமழ நிற்கிறது.
"நான் இங்கு முதல்முறையாக வந்திருக்கிறேன். பழைய நகரம், அழகிய கட்டிடங்களுடன் அமைந்துள்ளது “ என்று மிலனைச் சேர்ந்த ரோசெல்லா கூறினார்.
2014 ல், யுனெஸ்கோ இதை உலக பாரம்பரிய தளமாக அறிவித்த திலிருந்தே, சுமார் 650 கட்டிடங்களை மீட்டெடுக்கவும், உள்ளூர் வணிகங்களை புதுப்பிப்பதற்கும் அரசாங்கம் திட்டங்களை துரிதப்படுத்தியுள்ளது.
பழைய நகரத்தில் பிறந்து, இப்போது காஃபி ஹவுஸில் பணிபுரியும் 57 வயது ஃபாதில் ஜாஹிர் ’ அல்-பாலட்டிற்கு அதிகமான சுற்றுலாப் பயணிகளும் பார்வையாளர்களும் வருவதாக’க் கூறினார். யுனெஸ்கோவால், "செங்கடலின் எஞ்சியிருக்கும் ஒரே நகர்ப்புற மையம்” என குறிப்பிடப் பட்ட இந்த இடத்தில், இஸ்லாம் உருவான காலத்தி லேயே ரோஷன் மர பால்கனிகளுடன் கட்டப் பட்ட பவளக் கோபுர வீடுகள் இன்னும் பழமையான மசூதிகளுடன் நிற்கின்றன.
"62 வயதான நான், 40 ஆண்டுகளுக்கு முன்பு பார்த்ததை இப்போது திரும்பவும் பார்க்கிறேன். நான் என் பழைய நகரத்தில் இருப்பதைப் போல உணர்கிறேன்..’ என்று அல்கான்பஷி வணிக மேம்பாட்டு பணியகத்தின் பொது மேலாளர் அகமது அல்கான்பஷி கூறினார்.