நமீபியாவிலுள்ள வின்ஹோக் பகுதியில் சுஸன் டி மேயர் வளர்க்கும் குதிரைகள் ஒவ்வொரு சிறப்பு குழந்தைக்கும் ஒவ்வொரு விதமாக உதவி செய்கின்றன. ஆம், உண்மை தான்!
டி மேயர், தென்னாப்பிரிக்க நாடான நமீபியாவில் குதிரைகளின் ஆற்றலை கடிவாளமிட்டு, அவற்றின் மென்மையை, சிறப்புத் தேவை உள்ள குழந்தைகளுக்கு உதவ பயன்படுத்தும் ஒரு திட்டத்தை செயல்படுத்திக் கொண்டிருக்கிறார்.
வாரநாட்கள் வந்து விட்டால், இவரது குதிரைலாயத்தின் முன் சிறப்புப் பள்ளிகளிலிருந்து எட்டு முதல் பத்து வரையிலான குழந்தைகள் குழுக்களாக அணி வகுப்பார்கள். இவர்கள் குதிரைகளை குளிப்பாட்டி, தடவிக் கொடுத்து, சவாரி செய்து, ஏன் அவற்றுடன் பேசவும் செய்வார்கள் என்று டி மேயர் கூறுகிறார்.
குழந்தைகள் எவ்வளவு வித்தியாசமாக இருந்தாலும், குதிரைகள் அவர்களை இன்னார் என வகைப்படுத்துவதில்லை. மனிதர்களிடம் இல்லாத பெருங் குணம் அது’ என்று சொல்லும், டி மேயர் “பொதுவாக இந்த குழந்தைகள் ஏராளமான மனிதர்கள் நடுவில் இருக்க விரும்புவதில்லை ஆகையால், இங்கு குதிரை தான் அவர்களுக்கு ஹீரோ” என்கிறார்.
“எனேபிளிங் த்ரூ தெ ஹார்ஸ்” என்ற இவரது குதிரை தெரபி, ஆட்டிஸம் உள்ள குழந்தைகளிலும், கற்றலில் குறைபாடு உடைய குழந்தைகளிலும் ஒரு நேர்மறையான தாக்கத்தை உருவாக்குவதாக கருதப்படுகிறது.
”பெரிய அரேபியக் குதிரைகளை தெரபியில் பயன்படுத்தும் போது அவற்றின் பெரிய தோற்றமும் ஆளுமையும் குழந்தைகளுக்குள் ஒரு பெருமிதத்தை உண்டாக்குகிறது. குதிரையின் அருகில் வந்து அதை தடவிக் கொடுக்கும் போதே தெரபி ஆரம்பமாகி விடுகிறது,” என்கிறார் டி மேயர்.
ஆட்டிஸம், ஏடி ஹெச் டி போன்ற பிரச்சினைகள் உள்ள குழந்தைகளுக்கும், பேசமுடியாத, தொடப்படுவதை விரும்பாத டவுன் சிண்ட்ரோம் உள்ள வளர்ச்சிக் குறைபாடு உடைய குழந்தைகளுக்கும் டி மேயர் குதிரை தெரபி அளிப்பதன் மூலம் சிகிட்சை அளிக்கிறார்.
ஆப்பிரிக்க ஆசிய நாடுகளிலும் இவரது குதிரை தெரபிக்கு பெரும் வரவேற்பு உள்ளது.
விரல்களால் செய்யும் நுண்வேலைகள், கை கால்களால் செய்யும் வேலைகள், தசையை வலுப்படுத்துதல், கைகால் ஒருங்கிணைந்து இயங்குதல், சரியாக நிற்றல், போன்ற குழந்தைகளுக்கான எல்லா பயிற்சிகளையும் தமது தெரபி அளிப்பதாக கூறும் டி மேயர் ஒவ்வொரு திறனையும் கற்றுக் கொள்ளும் குழந்தைகளின் சிரிப்பு தரும் உத்வேகம் தான் தமக்கு உந்துசக்தி என்கிறார்.
குறைபாடுள்ள குழந்தைகளுக்கு குதிரை தெரபி..!
schedulePublished May 7th 25
thumb_upLike
commentComments
shareShare
schedulePublished May 7th 25