இந்தியாவின் கும்பமேளாவில் சமுக வலைத்தளப் புகைப்படங்கள் மூலம் ஒரே நாளில் பிரபலமான ஊசி பாசி விற்ற ஏழைப்பெண் மோனலிசா மாதிரி ஒரே நாளில் ஒரு புகைப்படம் மூலம் தாய்லாந்து நாட்டில் பிரபலமாகியிருக்கிறார் துப்புறவு தொழிலாளியான நோப்பாஜித் மீன் என்ற இளம்பெண்.
ரஷ்ய புகைப்படக் கலைஞரான செமியோன் ரெஸ்சிகோவ் கடந்த வாரம் பாங்காக் தெருக்களைச் சுற்றி வந்து கொண்டிருந்தபோது தெருவை சுத்தம் செய்யும் பணியிலிருந்த ஒரு இளம் பெண்ணின் அழகால் வசீகரிக்கப்பட்டார்.
உடனே அவரை ரகசியமாக தனது கேமிராவில் பதிவு செய்த ரெஸ்சிகோவ், தான் எடுத்த அந்தப் படத்தை மீனிடம் காட்டி அவருடைய ரியாக்ஷனையும் தன் கேமிராவில் பதிவு செய்ததோடு மொத்த நிகழ்வுகளையும் தனது டிக்டாக் பக்கத்திலும் பகிர்ந்தார்.
ரெஸ்சிகோவின் இந்த பதிவு வைரலானதைத் தொடர்ந்து நோப்பாஜித் மீன் ஒரே நாளில் தாய்லாந்தின் புகழ் பெற்ற பெண்களில் ஒருவராக மாறிவிட்டார்.
தாய்லாந்து ஊடகங்கள் அவரை போட்டி போட்டு பேட்டி எடுக்க, கொண்டாடப்படும் பிரபலமாகிவிட்டார் மீன். இதைத் தொடர்ந்து தாய்லாந்தின் புகழ்பெற்ற ஒப்பனைக் கலைஞரான நாங் சாட் மீனை அழைத்து தன்பங்கிற்கு நவீன முறையில் ஒப்பனை செய்துவிட முன்னணி மாடல்களுடன் போட்டி போடுமளவுக்கு பிரபலமாகிவிட்டார் மீன்.
இருபத்தெட்டு வயதில் ஒரு குழந்தைக்கு தயாக தனித்து வாழும் மீன் , ஒரு புகைப்படம் தன் வாழ்வை மாற்றி விட்டதாக குதுகலிக்கிறார்.