கடந்த 2024 ஆம் வருடம் ஆகஸ்ட் மாதம் மும்பை தாதர் ரயில் நிலையத்தில் சூட்கேஸில் ஒரு சடலம் பிடிபட்டது. அதை கொண்டு வந்த இருவரில் ஒருவர் தப்பி ஓடி விட பிடிபட்டவரை காவல்துறையினர் பைதுனி காவல் நிலையத்திற்குக் கொண்டு வந்து விசாரிக்கும் போது தான் அவர் பேசவோ, கேட்கவோ முடிய்யாத மாற்றுத் திறனாளி என்பது புரிந்தது.
விசாரணையில் எந்த தகவலும் பெற முடியததால், இரவு 2 மணியளவில் அவர்கள் சைகை மொழி தெரிந்த ஒருவரைத் தேடி, அங்கிருந்த மாற்றுத் திறனாளிகளின் பள்ளிக்குச் சென்று கொண்டிருந்தனர். அப்போது அங்கிருந்த கான்ஸ்டபிள் ராஜேஷ் சத்புடே என்பவர் தமது மகன் மாற்றத் திறனாளி தான் என்றும் அவர் சைகை மொழியில் பேச உதவி செய்வார் என்றும் கூறி அவரை அழைத்து வந்தார். கௌதம் சத்புடே என்ற அந்த இளைஞர் பிடிபட்டவருடன் பேசி எல்லா தகவல்களையும் சேகரித்து காவல்த் துறையினரிடம் அளித்தார்.
அவர் கொடுத்த தகவல்களின் படி, பிடிபட்ட ஜெய்சாவ்தா என்ற வாய் பேச முடியாத மாற்றுதிரனாளியான நபர் தப்பியோடிய ஷிவ்ஜித் சிங் என்பவருடன் சேர்ந்து அர்ஷத் சாதிக் அலி என்பவரைக் கொன்று சூட்கேசில் அடைத்து சடலத்தை வீசி விடும் முயற்சியில் ஈடுபட்டிருக்கும் போதுதான் பிடிபட்டிருக்கிறார்.
அர்ஷத் சாதிக் அலியின் மனைவிக்கும், ஜெய்சாவ்தாவுக்கும் ஏற்பட்ட தகாத உறவு தான் இந்த கொடூர கொலைக்குக் காரணம் என்று காவல்த் துறையிடம் தெரிவித்த கௌதம் சத்புடே இந்த கொலைக்குப் பின்னணியில் காது கேளாத மாற்றுத் திறனாளிகளின் வாட்ஸ் அப் குழு ஒன்று செயலாற்றியுதும், அர்ஷத் சாதிஅலியை கொலை செய்ய பல்வேறு திட்டங்களை தீட்டி தந்த திடுக்கிடும் தகவலையும் தெரிவித்தார்.
மாற்றுத்திறனாளிகளின் வாட்சப்குழு உறுப்பினர்களுடன் ஆலோசனையின்படிதான் தான் இந்த கொலை செய்ததாக ஜெய்சாவ்தா கூறியதைத் தொடர்ந்து வாட்ஸ் அப் குழு உறுப்பினர்களின் மீது காவல் துறையின் கவனம் திரும்பியது. இந்த குழுவில் உள்ள பெல்ஜியத்தைச் சேர்ந்த மாற்றுத் திறனாளி ஒருவரும் இந்த கொலை சதியில் ஆலோசனைகள் வழங்கியிருப்பதால் அவரையும் வழக்கில் சேர்க்க இருக்கிறது காவல்துறை.
காவல் துறைக்கு உதவியதால், அனைவரது பாராட்டுகளையும் பெற்ற ராஜேஷ் சத் புடே, தானும் மாற்றுத்திரனாளியான தன் மகனும், இந்திய குடிமக்களாக இயன்ற வரை தங்கள் கடமையை செய்ததாக மகிழ்ச்சியுடன் கூறினார்.