நிகழ்கால தமிழக அரசியலின் தவிர்க்க முடியாத தலைவி மற்றும் விமர்சனங்களுக்கு பேர் போன டாக்டர் தமிழிசை செளந்தராஜன் பற்றி காண்போம்.
தமிழக பாஜகவின் தலைவராக கடந்து நான்கு ஆண்டுகளாக இயங்கி கொண்டிருப்பவர்.பரபரப்புக்கும் சர்ச்சைகளுக்கும் பேர் போனவர்.இவருடைய ஒவ்வொரு பேச்சும் விமர்சனம் ஆகிறது.ஒவ்வொரு செயலும் விவாதப் பொருளாகிறது.அதற்கான உதாரணம் தூத்துக்குடி விமான நிலையத்தில் தமிழிசைக்கும் மாணவி சோபியாவுக்கும் உருவான சர்ச்சை.அரசியல் களம் தொடங்கி சமூக வலைத்தளங்கள் வரை தமிழிசை அதிகமான விமர்சிக்கப்படுகிறார்.
மேலும் கிண்டல்கள் கேலிக்கும் உள்ளாகும் இவர்,அவருடைய சிகை அலங்காரம் தொடங்கி தமிழகத்தில் தாமரை மலர்ந்தே தீரும் என அவரது அரசியல் முழக்கம் வரை அனைத்துமே கேலிக்கையாகிறது.பல இடங்களிலும் பல சமயங்களிலும் அவமதிக்கப்படுகிறார்கள்.அது மட்டுமில்லாமல் சமகால தலைவர்களை இவர் அணுகும் முறை கூட சர்ச்சையாகவே உள்ள நிலையில்,இவரது அரசியல் எதிர்வினைகள் கூட , தலைவர்களின் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது.
ஆளும் அதிமுக போன்ற அரசியல் கட்சிகளை பற்றி இன்னும் சில கட்சிகளை பற்றி இவர் எதிரும் புதிருமாக கூறும் கருத்துகள் அனைவரின் மத்தியிலும் பல விவாதங்களை உருவாக்கியுள்ளது.இந்த விவாதங்களை தாண்டி பல கேள்விகளும் தமிழிசை அரசியல் பயணத்தை நோக்கி எழுப்பப்படுகிறது.குறிப்பாக காங்கிரஸ் குடும்பத்தை சேர்ந்த தமிழிசை, காங்கிரஸின் கொள்கைக்கு நேர் எதிரான சித்தாந்தத்தை பின்பற்றும் பாஜகவில் ஏன் சேர வேண்டும் என்ற கேள்வியும்.பிராமணர்கள் ஆதிக்கம் செலுத்தக் கூடிய பாஜகவில் தமிழிசையை விட மூத்த தலைவர்கள் நிறைய பேர் இருப்பினும் ,வெறும் பதினைந்து கால அனுபவம் மட்டுமே கொண்ட ,தமிழிசை தலைவர் ஆனது எப்படி ? போன்ற பல கேள்விகள் நிலவுகின்றன.
பிறந்த நொடியில் இருந்தே அரசியல் காற்றை சுவாசிக்கும் தமிழிசை,தனக்கான அரசியல் பால பாடங்களை கற்று தேர்ந்து,தந்தை குமரி ஆனந்தன் போலவே தானும் சிறந்த மேடைப் பேச்சாளர் ஆக வேண்டும் என்ற ஆசையில் மிக ஆர்வமாக அனைத்தையும் தனக்குள் போதித்து ,சிறந்து எதிர்கால அரசியல்வாதியாக உருவாக வேண்டும் என்ற கனவில் ஒவ்வொரு நாளும் கடந்தார்.அதே சமயம் அவருடைய தாயார் தமிழிசையை மருத்துவராக்க விரும்பினார்.ஆகவே சென்னை மருத்துவக் கல்லூரியில் படித்து டாக்டர் பட்டம் பெற்றார்.அதே நேரத்தில் செளந்தராஜனை காதலித்து திருமணம் செய்து கொண்டார் தமிழிசை.அது அரசியல் ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக இருந்தது.
பிறகு தமிழிசை கனடாவிற்கு சென்று ஆய்வு பட்டம் பெற்றார்.தன்னுடைய மனைவியின் கனவு மற்றும் இலட்சியத்திற்கு தகுந்த உந்துதலாக இருந்தார் கணவர் செளந்தரராஜன்.மருத்துவத் துறையில் சிறந்து விளங்கினாலும் அரசியல் மற்றும் பேச்சு இதுவே தமிழிசைக்கு இரு கண்களாக இருந்தது.
அப்போது தமிழிசையின் தந்தை நாடறிந்த சிறந்த பேச்சாளர் என்பதால் அவரை முன்னிலைப்படுத்தி,பிரபலத் தொலைக்காட்சியில் நீங்களும் பேச்சாளர் ஆகலாம் ! என்ற நிகழ்ச்சி தயாரிக்கப்பட்டது.அந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளராகவும், நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் மாணவர்களுக்கு கற்று கொடுக்கும் பயிற்சியாளராகவும் சிறந்து விளங்கினார்.மேலும் மகளிர் பஞ்சாயத்து என்ற நிகழ்ச்சியும் நடத்தினார் தமிழிசை.காவேரி பிரச்சினைகள் உச்சக்கட்டத்தில் இருந்தபோது அதற்காக குரல் எழுப்பினார். பாஜகவிற்கு எதிராக வந்த குற்றச்சாட்டுக்கு , கட்டப்பஞ்சாயத்து செய்து இடங்களை வளைத்து போடுவது திருமாவளவனின் பாணி என பதிலளித்தார்.
இப்படி பல சர்ச்சைகள் விமர்சனம் இருந்தாலும் தனக்கென்று தனி தூணை நிலைநாட்டி இன்றும கம்பிரமாக தலை நிமிர்ந்து நிற்கும் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.