அஜித் எனக்காக கார் கதவை திறந்து விட்டார்.. பிறந்த நாள் நிகழ்ச்சி பகிர்ந்து கொண்ட நடராஜன்..!

thumb_upLike
commentComments
shareShare

கடந்த சில நாட்களுக்கு முன்னர் தமிழக கிரிக்கெட் வீரர் நடராஜன் பிறந்தநாள் கொண்டாட்டத்தை கொண்டாடிய போது அதில் அஜித் கலந்து கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரல் ஆனது. இந்த சந்திப்பு குறித்து இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டி முடிந்தவுடன் நடராஜன் அந்த மலரும் நினைவுகளை பகிர்ந்து கொண்டார்.

சமீபத்தில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் சூப்பர் 8 போட்டி நடந்த போது அதில் இந்தியா வெற்றி பெற்றது என்பது தெரிந்தது. இந்த நிலையில் இந்த போட்டியின் போது ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழ் சேனலில் கமெண்ட்ரி நிகழ்ச்சியில் நடராஜன் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற போது தனது பிறந்த நாளன்று அஜித்தை சந்தித்தது குறித்து நினைவுகளை பகிர்ந்து கொண்டார்.

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் பிசியோதெரபி தான் அஜித்துக்கும் பயிற்சி அளித்து வருகிறார் என்ற நிலையில் ஹைதராபாத் அணியுடன் இரவு உணவுகளை சாப்பிட சென்றபோதுதான் சர்ப்ரைஸ் ஆக அங்கு அஜித்தை சந்தித்தேன். அப்போது எனக்கு பிறந்தநாள் என்றவுடன் உடனே கேக் வெட்டி கொண்டாட்டம் நடந்தது.

அஜித்தை இதுவரை நான் நேரில் சந்திக்காத நிலையில் முதல் முறையாக சந்தித்த போது எனக்கு ஆச்சரியம் ஏற்பட்டது. மேலும் அஜித் ரொம்ப எளிமையானவர் என்பதற்கு ஒரே ஒரு உதாரணத்தைச் சொல்ல வேண்டும் என்றால், நாங்கள் எல்லோரும் சாப்பிட்டு விட்டு வெளியே வந்த போது என்னுடைய கார் உட்பட அனைவருக்கும் கார் கதவை திறந்து அவர்தான் வழி அனுப்பி வைத்தார், அந்த நிகழ்வை என்னால் மறக்க முடியாது’ என்றும் கூறினார்.

NewsGlitz in Social Media
Share to your pages!
Close