சென்னைக்கு ஒரு வாரம் மழை இல்லை: தமிழ்நாடு வெதர்மேன் தகவல்..!

thumb_upLike
commentComments
shareShare

கடந்த சில நாட்களாக சென்னையில் மிதமான மழை முதல் கனமழை வரை பெய்து வந்த நிலையில், இன்னும் ஒரு வாரத்துக்கு சென்னை மற்றும் சுற்றுப்புறத்திற்கு மழை இல்லை என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்.

சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் இன்று மட்டும் லேசான மழை பெய்யும் என்றும் அதன் பிறகு ஒரு வாரத்துக்கு மழைக்கு வாய்ப்பு இல்லை என்றும் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். ஆனால் அதே நேரத்தில், இன்றும் நாளையும் டெல்டா மற்றும் தென் தமிழகத்தில் உள்ள சில மாவட்டங்களில் மழையை எதிர்பார்க்கலாம் என்றும் குறிப்பாக ஈரோடு, நீலகிரி, மற்றும் மேற்கு மாவட்டங்களில் இன்று மழை பெய்ய வாய்ப்பு என்றும் அவர் தெரிவித்தார்.

வடகிழக்கு பருவமழை இன்னும் நிறைவடையவில்லை என்றும் பருவமழையில் தமிழ்நாட்டில் இன்னும் அதிக மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது என்றும் இந்த மாத இறுதியில் தமிழகத்தை நோக்கி ஒரு புயல் வருகிறது என்றும் அவர் கூறினார்.

அந்த புயல் தீவிரம் அடையுமா? அதற்கு பெயர் வைக்கப்படுமா என்பதை கணிக்க 10 முதல் 12 நாட்கள் வரை ஆகும் என்றும் அவர் தனது பதிவில் குறிப்பிட்டார்.

NewsGlitz in Social Media
Share to your pages!
Close