விவாகரத்துக்கு பின் அரசியல்.. மணிரத்னம் பட நடிகையின் தாயார் தகவல்..!

thumb_upLike
commentComments
shareShare

மணிரத்னம் படத்தில் நடித்த நடிகை விரைவில் தனது கணவரிடம் இருந்து விவாகரத்து பெற இருக்கும் நிலையில் விவாகரத்து பெற்றபின் அவர் அரசியலில் குதிக்க வாய்ப்பு இருப்பதாக அவரது தாயார் பேட்டி அளித்துள்ளார்.

மணிரத்னம் இயக்கத்தில் உருவான 'ஆயுத எழுத்து’ என்ற தமிழ் படத்திலும் ஏராளமான பாலிவுட் படங்களிலும் நடித்தவர் நடிகை இஷா தியோல். இவர் பாலிவுட் நட்சத்திர ஜோடிகளான ஹேமா மாலினி - தர்மேந்திராவின் தம்பதியின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இஷா தியோல் கடந்த 2012 ஆம் ஆண்டு பரத் என்பவரை திருமணம் செய்த நிலையில் இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிய முடிவு செய்துள்ளதாகவும் விரைவில் விவாகரத்து குறித்து அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் சமீபத்தில் பேட்டி அளித்த இஷா தியோல் தயார் ஹேமா மாலினி தனது மகள் அரசியலில் ஆர்வம் காட்டி வருவதாகவும் விரைவில் அவர் அரசியலில் குதிப்பார் என்றும் தெரிவித்துள்ளார். ஏற்கனவே ஹேமா மாலினி பாஜக பிரமுகராக உள்ளார் என்பதும் அவர் அந்த 2019 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் கூட பாஜக சார்பில் மதுராவில் போட்டியிட்டு வெற்றி தற்போது எம்பி யாக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஹேமமாலினி போலவே அவரது மகள் இஷோ தியோல் தீவிர அரசியலில் விரைவில் ஈடுபடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

NewsGlitz in Social Media
Share to your pages!
Close