தோனி, சச்சினை அடுத்து இன்னொரு கிரிக்கெட் வீரரின் பயோகிராபி.. அதிகாரபூர்வ அறிவிப்பு..!

thumb_upLike
commentComments
shareShare

இந்திய கிரிக்கெட் வீரர்களான மகேந்திர சிங் தோனி மற்றும் சச்சின் டெண்டுல்கர் வாழ்க்கை வரலாறு திரைப்படங்கள் ஏற்கனவே வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்ற நிலையில் அடுத்ததாக யுவராஜ் சிங் வாழ்க்கை வரலாறு திரைப்படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் ஆல் ரவுண்டர் யுவராஜ் சிங் என்பதும் இவரது வாழ்க்கை வரலாறு திரைப்படம் உருவாக இருப்பதாகவும் டீ சீரிஸ் என்ற நிறுவனம் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

இன்னும் டைட்டில் வைக்கப்படாத இந்த படத்தில் யுவராஜ்சிங் கேரக்டரில் நடிப்பது யார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. சர்வதேச கிரிக்கெட் அரங்கில் பல சாதனைகளை செய்துள்ள யுவராஜ் சிங், ஒரே ஓவரில் 6 பந்துகளில் 6 சிக்ஸர் அடித்து சாதனை செய்தவர் என்பதும் கண்டிப்பாக இவரது வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் இந்த சாதனை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படம் குறித்த மற்ற தகவல்கள் விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.

NewsGlitz in Social Media
Share to your pages!
Close